பயிர் பாதுகாப்பு :: கேழ்வரகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
வெட்டுப்புழு: ஸ்போடோப்டீரா எக்சிகுவா
தாக்குதலின் அறிகுறிகள்:
  • நாற்றங்கால் பருவத்தில் புழுக்கள் இலைகளை உண்ணும்.இலையின் சதைப் பகுதியை மட்டும் சுரண்டி உண்பதால், இலைகளின் நரம்புகள் மட்டும் தெரியும்.இளம்புழுக்கள் இலைகளையும் தண்டையும் முறிக்காமல் உண்ணும். பிறகு இலைகள் முழுவதையும் கடித்து உண்ணத் தொடங்கும்.
பூச்சி கடித்த இலைகள் புழுக்கள் கடித்த இலைகள் இலையின் நடுநரம்பு மட்டும் தெரிதல் இலையின் பச்சை பகுதிகளை சுரண்டுதல்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: இளம் செடிகளின் அடிப்பாகத்தில் பழுப்பு நிறத்தில் உருண்டையான வடிவத்தில் முட்டைகள் கூட்டம் கூட்டமாக காணப்படும்.
  • புழு: தடித்த, மென்மையான உடலுடன், பழுப்பு கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். இவற்றின் மேற்புறத்தில் வளைவான கோடுகளும், பக்கவாட்டில் மஞ்சள் நிற கோடுகளும் தெரியும்.
  • கூட்டுப்புழு: மண் கூடுகளில் கூட்டுபுழு உருவாகிறது
  • பூச்சி: அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் வெள்ளை நிற பின் இறகுகளுடன் காணப்படும்
முட்டை புழு கூட்டுப்புழு முதிர்பூச்சி்

கட்டுப்படுத்தும் முறை:

  • களை மற்றும் எஞ்சிய பயிர் கழிவுகளை அகற்றவேண்டும்.
  • பசுந்தாள் உரங்களை தவிர்த்து, மக்கிய தொழு உரம் இடவேண்டும். இதனால் பூச்சிகள் முட்டையிடுவதை தவிர்க்கலாம்.
  • கார்பரில் 50 WP @ 2.5 கிலோ/ஹெக்டேர், குளோர்பைரிபாஸ் 20 EC @ 2 லிட்டர்/ஹெக்டேர், பேசலோன் 35 EC @ 1.25 லிட்டர்/ஹெக்டேர் தெளிக்கவேண்டும்.
  • ஸ்டீனிமேரா கார்போகேப்சே என்ற பயனுள்ள நூற்புழு அல்லது பூச்சியைத் தாக்கக்கூடிய பூஞ்சாணம் பியுவேரியா பேசியானா ஆகியவற்றை வெட்டுப் புழுக்கள் தோன்றும் முதல் தருணத்திலேயே வயலில் விடவேண்டும். நூற்புழுக்கள் புழுக்களின் உள்ளேயே முட்டையிட்டு புழுக்களைத் தாக்குகிறது.
  • நடவு செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் உமியுடன் பேசில்லஸ் துரிஞ்சென்சிஸை கலந்து நடவுப் பாத்திகளில் விட்டு இயற்கை வழியில் புழுக்களைக் கட்டுப்படுத்தவேண்டும்.
  • டிரைகோகிராமா குளவிகளை வாரம் ஒரு முறை மூன்று வாரங்களுக்கு தொடர்ச்சியாக வெளியிட்டு வெட்டுப்புழு முட்டைகளை அழிக்கவேண்டும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024