பயிர் பாதுகாப்பு :: கேழ்வரகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
வெட்டுக்கிளி : குரோட்டோகோனஸ் டிரேக்கிப்டிரஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • வெட்டுக்கிளியின் இளம் பூச்சிகள் மற்றும் முதிர்பூச்சிகளும் அதிக அளவில் இலைகளை உண்ணும்.
  • இலைகளின் விளிம்புகளை கடித்து ஓட்டைகளை ஏற்படுத்தும்.
  • பாதிப்பின் நிலை தீவிரமடையும் பொழுது, இலைகள் உதிர்ந்து வயல் முழுவதும் மேயப்பட்டது போல தோற்றமளிக்கும்.
இலை விளிம்புகள் கடிக்கப்பட்டிருக்கும் இலைகளில் பூச்சிகள் இருக்கும் பூச்சி கடித்த இலைகள் இலை விளிம்புகள் கடிக்கப்பட்டிருக்கும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: வெட்டுக்கிளிகள் மண்ணில் கொத்து கொத்தாக முட்டையிடும். வெள்ளை,மஞ்சள் பச்சை, அழுக்குநிறம் மற்றும் பல்வேறு பழுப்பு நிறத்தில் முட்டைகளைக் காணலாம்.
  • குஞ்சுகள்: புதிதாக பொறித்த குஞ்சுகள் வெள்ளை நிறத்தில் கோடுகளுடன் காணப்படும்.  வெட்டுக்கிளியின் குஞ்சுக்காலம் 30-50 நாட்கள் ஆகும்.
  • முதிர்பூச்சி: தடித்த, பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் மஞ்சள் கோடுகளுடன் காணப்படும்.
இளம் பூச்சி முதிர்பூச்சி

கட்டுப்படுத்தும் முறை:

  • அறுவடைக்குப்பின் நிலத்தை சுத்தமாக, நன்றாக உழுது விடுவதன் மூலம், வெட்டுக்கிளியின் முட்டைகளை அழிக்கலாம். முட்டைகள் மண்ணில் மேற்பரப்பிற்கு வருவதால் அவை உலர்ந்து காய்வதுடன், பறவைகள் மற்றும் பிற பூச்சிகள் சாப்பிடுவதற்கு ஏதுவாகிறது.
  • பருவத்திற்கு முன்பே விதைத்து அறுவடை செய்யவேண்டும்
  • கோடை உழுவு செய்ய வேண்டும்
  • கார்பரில் 50 WP 400 கிராம் தெளிக்கவேண்டும்
  • சிலந்திகள் வெட்டுக்கிளி குஞ்சுகளையும், முதிர்ப்பூச்சிகளையும் உண்கின்றன.
  • வெதுவெதுப்பான, ஈரப்பதமான சூழலில் எண்டமாப்தோரா கிரிலி பூஞ்சாணம் வெட்டுக்கிளியின் பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024