பயிர் பாதுகாப்பு :: கேழ்வரகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
கதிர்நாவாய்ப் பூச்சி : யூப்ரோக்டிஸ் சப்நொட்டேட்டா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • கதிர்நாவாய் பூச்சி கதிர் பருவத்தில் பயிரை தாக்குகிறது.
  • உருவாகும் கதிர் மணிகளை உண்டு கதிரினுள் உள்ள தானியங்களை அழிக்கிறது.கதிரில் பட்டு போன்ற நூலினால் வளை பிண்ணுகிறது.
  • தாக்கப்பட்ட கதிர்கள் பூச்சிகளின் கழிவுகளோடு காணப்படும்.
பகுதி உண்ட கதிர்கள் பயிரின் மீது புழுக்கள் காணப்படும் கதிர்களில் வலை பின்னப்பட்டிருக்கும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: உருண்டையான, ஒளி புகக்கூடிய வெள்ளை நிற முட்டைகள் (6-24 எண்ணிக்கை) கூட்டமாக காணப்படும். ஆரஞ்சு மஞ்சள் நிற முடிகளால் சூழப்ப்பட்டிருக்கும்.
  • புழு: கம்பளி புழு சிறியதாக, அடர் பழுப்பு நிறத்தில், மஞ்சள் வளையத்துடன் குறைவான முடிகளுடன் காணப்படும்.
  • கூட்டுப்புழு: மண்ணில் கூட்டுப்புழு உருவாகிறது.
  • முதிர் பூச்சி: முதிர் பூச்சிகள் பழுப்பு நிறத்தில் அடர் செதில்களுடன் கூடிய முன் இறகுகளை கொண்டிருக்கும். பின் இறகுகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
முட்டை புழு கூட்டுப்புழு முதிர்பூச்சி்

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • ஊடுபயிரிடுதல், விதைப்பு காலம், இடைவெளி, நீர்/ஊட்டச்சத்து மேம்பாடு போன்ற உழவியல் கட்டுப்பாட்டு முறைகளை கையாள வேண்டும்
  • மாலத்தியான மற்றும் 0.1% கார்பரில் தெளிக்க வேண்டும்.
  • நள்ளிரவு வரை விளக்குப்பொறி வைத்து முதிர் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.
  • இனக்கவர்ச்சிப் பொறிகளை @ 12/ஹெக்டேர் என்ற அளவில் வைத்து, பூக்கும் பருவம் முதல் கதிர் முதிரும் வரை கதிர் நாவாய் புழுவின் ஆண் அந்துப்பூச்சிகளை கவரலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024