பயிர் பாதுகாப்பு :: கேழ்வரகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
வெள்ளை தண்டு துளைப்பான்: சலுரியா இன்பிசிடா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழுக்கள் வேர்ப்பகுதியைத் தாக்கும்
  • தாக்குதல் அதிகமாகும் போது, நடுக்குருத்து காய்ந்து போகும், பயிர்கள் மஞ்கள் நிறமாக மாறிவிடும்.
  • மண்ணிற்கு அருகில் உள்ள தூர்களின் அடிப்புறத்தில் புழுக்கள் காணப்படும். இவை பயிரின் அடிப்பகுதியில் சேதம் ஏற்படுத்தும்.
பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறிவிடும் நடுக்குருத்து காய்தல்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: முட்டைகள் ஒரு குழுவாக 100 முட்டைகள் வரை இடப்படும். இவை சாம்பல் நிற மயிரிழைகளுடன் காணப்படும். இவை பார்ப்பதற்கு மஞ்சள் தண்டுத்துளைப்பானின் முட்டைகள் போன்றே இருக்கும். பெண் பூச்சி இலை நுனிப்பகுதிக்கு அருகில் முட்டைகள் இடுகின்றன.
  • புழு: பால் வெள்ளை நிறத்தில் மஞ்கள் நிறத் தலையுடன் காணப்படும்
  • கூட்டுப்புழு: பழுப்பு நிறத்தில் தண்டின் உட்பகுதியில் கூடு கட்டியிருக்கும்
  • பூச்சி: அடர்பழுப்பு நிறத்தில், முன் இறக்கைகளின் ஓரங்களில் வெள்ளை நிறப்பட்டையுடன் காணப்படும்.
முட்டை புழு கூட்டுப்புழு முதிர்பூச்சி்

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • கார்பைரில் 50 WP ஒரு எக்டருக்கு ஒரு கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
  • மித்தைல் பாரத்தியான் 50 EC 1 மில்லி/லிட்டர் (அ) பாஸ்போமிடான் 85 WSC 0.5 மில்லி/லிட்டர் (அ) டைமெத்தோயேட் 30 EC 1.7 மில்லி/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024