பயிர் பாதுகாப்பு :: துவரை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
புள்ளிகாய்த் துளைப்பான்: மெளருக்கா விட்ரேட்டா

அறிகுறிகள்:

  • மொட்டுகள், பூக்கள், காய்களில் துளைக்குழிகள் காணப்படும்.
  • தாக்கப்பட்ட காய்கள் மற்றும் பூச்சிகளில் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து விலைப் பின்னியிருக்கும்.

பூச்சியின் விபரம்:

  • புழுக்கள் : பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் பழுப்பு நிற தலையுடன் இருக்கும். 2 இணை சுடர் புள்ளிகள் ஒவ்வொரு பிரிவுக்கும் பின்னால் இருக்கும்
  • தாய்ப்பூச்சி : முன்னிறைக்கைள் : லேசான பழுப்பு நிறத்தில் வெள்ளை நிற குறிகளுடன் காணப்படும். பின்னிறைக்கைகள் வெள்ளை நிறத்தில் பழுப்புநிற குறிகளுடன் பக்கவாட்டில் இருக்கும்
முட்டை புழு கூட்டுப்புழு தாய்ப்பூச்சி

கட்டுப்பாடு :

  • பொருளாதார சேதநிலை: 5 / தாவரம்
  • பறவைத் தாங்கிகள்  50 / ஹெக்டர்
  • வளர்ந்த புழுக்கள் மற்றும் கொப்புள வண்டை சேகரிக்கவும்.
  • 0.1% டீபால் உடன் ஹெச்எ என் .பி . வி  3 x1012  POB/ஹெக்டர்
  • கீழ்கண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை தெளிக்கவும்
    • ஆசாடிரக்டின்  0.03% டபிள்யூ .எஸ்.பி 2500-5000 கிராம் / ஹெக்டர்
    • பேசில்லஸ் துரிங்ஜெனிஸிஸ் செரோவர்  குர்ஷ்டகி   (3A, 3B, 3c) 5% WP1000-1250 கிராம் / ஹெக்டர்
    • டைமிதோயேட் 30% EC 1237 மிலி / ஹெக்டர்
    • இமாமெக்டின் பென்சோவேட் 5% SG 220 கிராம் / ஹெக்டர்
    • இன்டோக்சாகார்ப் 15.8% எஸ்.சி 333 மிலி / ஹெக்டர்
    • க்லோரன்றநிளிப்ரோலே 18.5 எஸ்.சி 150 மிலி / ஹெக்டர்
    • ஸ்பினோசேடு 45% எஸ்.சி  125-162 மிலி / ஹெக்டர்
    • வேப்பங்கொட்டை சாறு 5% ஐ இருமுறை தொடர்ந்து டிரையாசோபாஸ் 0.05%
    • வேப்ப எண்ணெய் 2%
    • பாசலோன் 0.07%

 (திரவம் 625 மிலி / ஹெக்டர் தெளிக்க வேண்டும்) குறிப்பு: பூச்சிக்கொல்லி / ஹெக்டர் என் .பி . வி  தெளிக்க வேண்டும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015