பயிர் பாதுகாப்பு :: துவரை பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
முள்ளுக் காய்துளைப்பான்: ஈட்டியல்லா ஜிங்கினெல்லா |
அறிகுறிகள்: |
- மொட்டுக்கள், பூக்கள், இளம் காய்கள் துளைக்குழிகளுடன், நத்தைப்புழு இருப்பது போலவே காணப்படும்.
- காய்களில் புழுக்கள் நுழைந்த இடத்தில் புழுவின் கழிவுகளுடன் காணப்படும்.
- பூக்கள் மற்றும் இளம் காய்கள் உதிர்ந்து கீழே விழும்
- முதிர்ந்த காய்களில் புழு நுழைந்த இடத்தில் பழுப்பு நிற புள்ளியுடன் காணப்படும்.
- முதலில் காய்களின் உள் பகுதிகளை தின்று பின் வெளி பக்கத்தை உண்கிறது. இதனால் இரண்டிலிருந்து நான்கு காய்கள் ஒன்றாக சேர்ந்துவிடும்.
|
|
பூச்சியின் விபரம்:
- முட்டைகள்: முட்டைகள் தனி அல்லது கூட்டமாக புறவிதழ்வட்டம் மத்தியில் மற்றும் காய்கள் அல்லது காய்களின் மேற்பரப்பில் காணப்படும். ஒரு பெண் 5-6 நாட்களில், 47-178 முட்டைகள் இடுகிறது.
- புழுக்கள்: புழுக்கள் பச்சை காய்களில் துளையிட்டு விதையை உண்கிறது. புழுக்கள் முழுமையாக வளர்ந்த பின் தரையில் வீழ்ந்து தரையின் அடியில் அல்லது காய்ந்த இலைகளின் கீழே 2.5 செ.மீ க்கு கூட்டை ுக்கஉருவாக்குகிறது. ஆரம்பத்தில் பச்சை நிறத்திலும், பின் இளம் சிவப்பு நிறத்தில் மாறும். முன் மார்புக் கண்டத்தில் 5 கருப்பு புள்ளிகள் காணப்படும்.
- கூட்டுப்புழு: கூட்டுப்புழுவின் காலம் 9-20 நாட்கள் வரை நீடிக்கும். காலநிலையை பொறுத்தே இவை சார்ந்தவை. அந்துப்பூச்சிகள் வெளிப்பாட்டுக்கு பிறகு 24-30 மணி நேரம் நீடிக்கும்.
- தாய்ப்பூச்சி: பழுப்புகலந்த சாம்பல் நிறத்தில் இரும். முன் மார்புகண்டம் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். முன்னிறைக்கையில் வெள்ளை நிற வரிகள் இருக்கும்.
|
|
|
புழு |
தாய்ப்பூச்சி |
|
கட்டுப்பாடு:
- நன்மை தரும் பூச்சிகளான டேற்றாஸ்டைகஸ் வகைகளை, ப்ரெகான்ஹெபெடோர், பநேரோடோமா வகைகளை மற்றும் பிஹென்தேகாசிசெல்லா போன்றவற்றை பாதுகாக்க வேண்டும்.
- பொருளாதார சேதநிலையை : 10 % பாதிக்கப்பட்ட பகுதிகள்
- ஆழமான கோடை உழவு முதல் 2-3 வருடங்களுக்கு செய்ய வேண்டும்.
- ஆரம்ப விதைப்பு, குறுகிய கால ரகம்.
- நெருக்கமான பயிர் இடைவெளியை தவிர்க்க வேண்டும்.
- உயரமான சோளத்தை பறவை குடிலாக வளர்க்கவும்.
- வளர்ந்த புழுக்கள் மற்றும் தாய்ப்பூச்சிகளை சேகரித்து அழிக்கவும்.
- மயக்கப்பொறியை 50மீ இடைவெளியில் 5 பொறி / ஹெக்டர் என வைக்க வேண்டும்
- எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகள் என்ற எண்ணிக்கையில் அமைக்கவும்.
- அந்துப்பூச்சியை அழிக்க விளக்குப் பொறிகளை (1 விளக்குப் பொறி / 5 ஏக்கர்) அமைக்க வேண்டும்
- டிரைகோகிரம்மா ச்லிஒனிச் 1.5 லட்சம் / எக்டர் / வாரத்திற்க்கு 4 முறை வெளியிடுவதன் மூலம் கட்டுபாட்டை பெறலாம் .
- பச்சை கண்ணாடி இறக்கை நாவாய்ப் பூச்சி , வேட்டையாடும் கெட்ட நாற்றம் உள்ள நாவாய்ப் பூச்சி, சிலந்தி , எறும்புகள் போன்றவற்றை சேமிக்கவும் .
- டீபால் 0.1% உடன் என் .பி . வி 250 எல் இ / ஹெக்டர் மற்றும் வெல்லம் 0.5% ஐ,10-15 நாட்கள் இடைவெளியில் , 3 முறை இட வேண்டும் (பூச்சிக்கொல்லி /ஹெக்டர் என் பி வி ஐ புழுக்கள் ஆரம்ப நிலையில் இருக்கும்போது தெளிக்க வேண்டும் )
- பிடி 600 கிராம், வேப்ப எண்ணெய் / புங்க எண்ணெய் 80 இசி @ 2 மி.லி / லிட்டர்
- வேப்பங் கொட்டை சாறு 5% இருமுறை தெளித்து தொடர்ந்து டிரையாசோபாஸ் 0.05% தெளிக்க வேண்டும்.
- குயினால்பாஸ் 4டி அல்லது கார்பரில் 5டி ஏதேனும் ஒரு பூச்சிகொல்லியை 25 கிலோ /ஹெக்டர் தெளிக்க வேண்டும்.
- குயினால்பாஸ் பூச்சிக்கொல்லியை 25 இ சி @ 1000 மி லி /ஹெக்டர் தெளிக்க வேண்டும்.
|
|