பயிர் பாதுகாப்பு :: துவரை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
மீன் காய்த் துளைப்பான் : அடிசுரா அட்கின்சோனி

அறிகுறிகள்:

  • புழுக்கள் காயின் உள்ளே துளைத்து, உள்ளே உள்ள விதைகளை உண்டு விடும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: முட்டைகள் தனித்தனியாக மலர்கள், மொட்டுக்கள்  மற்றும் காய்களின் தனித்தனியாக  காணப்படும். முட்டை சிறிய அளவில் காணப்படும். முட்டை காலம் 3 நாட்கள் ஆகும்.
  • புழு: முழுமையாக வளர்ந்த புழு பழுப்பு பச்சை நிறத்தில்,  28-35 மிமீ நீளத்தில் இருக்கும். புழு காலம் 14-15 நாட்கள் ஆகும்.
  • பூச்சி:அந்துப்பூச்சிகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.
தாய்ப்பூச்சி

கட்டுப்பாடு:

  • நன்மை தரும் பூச்சிகளான ப்ரெகான்ஹெபெடோர ஐ  பாதுகாக்க வேண்டும்.
  • பொருளாதார சேதநிலையை : 10 % பாதிக்கப்பட்ட பகுதிகள்
  • ஆழமான கோடை உழவு முதல் 2-3 வருடங்களுக்கு செய்ய வேண்டும்.
  • ஆரம்ப விதைப்பு, குறுகிய கால ரகம்.
  • நெருக்கமான பயிர் இடைவெளியை தவிர்க்க வேண்டும்.
  • உயரமான சோளத்தை பறவை குடிலாக வளர்க்கவும்.
  • வளர்ந்த புழுக்கள் மற்றும் தாய்ப்பூச்சிகளை சேகரித்து அழிக்கவும்.
  • மயக்கப்பொறியை 50மீ இடைவெளியில் 5 பொறி / ஹெக்டர் என வைக்க வேண்டும்
  • எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகள் என்ற எண்ணிக்கையில் அமைக்கவும்.
  • அந்துப்பூச்சியை அழிக்க விளக்குப் பொறிகளை (1 விளக்குப் பொறி / 5 ஏக்கர்) அமைக்க வேண்டும்
  • டிரைகோகிரம்மா ச்லிஒனிச் 1.5 லட்சம் / எக்டர் / வாரத்திற்க்கு 4 முறை வெளியிடுவதன் மூலம் கட்டுபாட்டை பெறலாம் .
  • பச்சை கண்ணாடி இறக்கை நாவாய்ப் பூச்சி , வேட்டையாடும் கெட்ட நாற்றம் உள்ள நாவாய்ப் பூச்சி, சிலந்தி , எறும்புகள் போன்றவற்றை சேமிக்கவும் .
  • டீபால் 0.1% உடன் என் .பி . வி 250 எல் இ / ஹெக்டர் மற்றும் வெல்லம் 0.5% ஐ,10-15 நாட்கள் இடைவெளியில் , 3 முறை இட வேண்டும் (பூச்சிக்கொல்லி /ஹெக்டர் என் பி வி ஐ புழுக்கள் ஆரம்ப நிலையில் இருக்கும்போது தெளிக்க வேண்டும் )
  • பிடி 600 கிராம், வேப்ப எண்ணெய் / புங்க எண்ணெய் 80 இசி @ 2 மி.லி / லிட்டர்
  • வேப்பங் கொட்டை சாறு 5% இருமுறை தெளித்து தொடர்ந்து டிரையாசோபாஸ் 0.05% தெளிக்க வேண்டும்.
  • குயினால்பாஸ் 4டி அல்லது கார்பரில் 5டி ஏதேனும் ஒரு பூச்சிகொல்லியை 25 கிலோ /ஹெக்டர் தெளிக்க வேண்டும்.
  • குயினால்பாஸ் பூச்சிக்கொல்லியை 25 இ சி @ 1000 மி லி /ஹெக்டர் தெளிக்க வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015