துவரை காய் ஈ : மெலோனோகுரோழைமசா அப்டியூசா |
அறிகுறிகள்:
- அடர் பழுப்பு படிவுகள் காயின் மேல்புறத்தில் காணப்படும்.
- காய்ந்த காய்களில் ஊசி போன்ற துளைகள் காணப்படும்.
- விதைகள் சுருங்கி, கோடுகளுடன், பகுதி உண்ண நிலையில் இருக்கும்.
- துவரை காய் ஈ மென்மையான விதைகளை துளையிட்டு சேதம் ஏற்படுத்துவதுடன் தானியங்களை உண்கிறது.
- சேதமடைந்த விதைகள் முளைப்புத் திறனை இழப்பதுடன், உண்பதற்கு ஏதுவாக இருக்காது.
- கடுமையான சேதநிலையில், 60-70% சேதம் ஏற்படுகிறது.
|
|
பூச்சியின் விபரம்:
- முட்டை: முட்டைகள் தனியாக அல்லது கூட்டமாக துளையிடுதல் மூலம் காயின் உள்ளே இடபடுகின்றன. ஈ 60-80 முட்டைகள் இடும். அடைகாக்கும் காலம் 2-4 நாட்கள்
- புழு: புழு காலம் 5-18 நாட்கள்.
- கூட்டுப்புழு: கூட்டுபுழுவின் காலம் 7-10 நாட்கள்.
|
|
|
புழு |
தாய்ப்பூச்சி |
|
கட்டுப்பாடு:
- நன்மை தரும் பூச்சிகளான யுடிரஸ்லிவிடஸ் , யுரிடோமா வகைகள் மற்றும் யுடிரஸ் அக்ரோமைசேவை பாதுகாக்க வேண்டும்.
- கார்பரில் 50 டபிள்யு பி 1.5 கிலோ, லம்பட ச்ய்ஹலோத்ரின் 5 இசி 400 -500 மிலி லுபினுரோன் 5.4 இசி 2.5 லி ஐ 700 லி தண்ணீரில் கலந்து ஒரு ஹெக்டருக்கு தெளிக்கவும்.
|