பயிர் பாதுகாப்பு :: ரோஜா பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
வெங்காய இலைப்பேன்: திரிப்ஸ் டபாசி
சேதத்தின் அறிகுறி:
- குஞ்சுகளும் பூச்சிகளும் இலைக்கு அடியில் உள்ள திசுக்களை சுரண்டித் திண்ணும்
- தாக்கப்பட்ட இலைகளில் வெள்ளைக் கோடுகள் காணப்படும்
- இலைகளில் வெளுப்பு நிற திட்டுகள் காணப்படும், முடிவில் காய்ந்து உதிர்ந்துவிடும்
பூச்சியின் விபரம்:
- திராட்சை இலைப்பேன்:
பூச்சிகள் கருப்பு நிறத்திலும், குஞ்சுகள் சிவப்பு நிறத்திலும் காணப்படும்
- வெங்காய இலைப்பேன்:
குஞ்சுகளும், பூச்சிகளும் இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
- மிதைல் டெமட்டான் 2மி.லி (அ) பாசலோன் 2மி.லி / லிட்டர் (அ) வேப்பம் எண்ணெய் 3 சதவிதம் தெளிக்கவும்
|
|
|