செதில்பூச்சி: லின்டின்கேஸ்பிஸ் ரோஸி
சேதத்தின் அறிகுறி:
- தண்டை முழுவதுமாக செதில்பூச்சி சூழ்ந்து இருக்கும்
- தாவரத்தின் தாக்கப்பட்ட பகுதிகள் காய்ந்துவிடும்
- தாக்கம் அதிகமாக இருந்தால் தாவரங்கள் காய்ந்துவிடும்
பூச்சியின் விபரம்:
- செம்பழுப்பு நிற மெழுகு செதில்பூச்சி பழைய தண்டுகளின் அடிப்பகுதியில் தோன்றும்
- பெண்பூச்சி பெரிதாகவும், இறக்கையற்றும் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி எரிக்க வேண்டும்
- மண்ணெண்ணையில் (அ) டீசலில் பஞ்சை நனைத்து செதில்பூச்சியை சுரண்டிவிட வேண்டும்
- மாலத்தியான் 2மி.லி / லிட்டர் கிளைகளை வெட்டிய பிறகு தெளிக்கவும்
- கார்போபியுரான் 5 கிராம் / தாவரம் மீன் எணஃணெய் ரோசின் சோப்பு 25 கிராம் / லிட்டரில் கரைத்து தெளிக்கவும்
|
|