பயிர் பாதுகாப்பு :: ரோஜா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

ஆமணக்கு காவடிப்புழு: அக்கேயா ஜனாதா

தாக்குதலின் அறிகுறிகள்

  • புழு இலையை உண்டு சேதம் பண்ணும்.

பூச்சியின் அடையாளம்

  • வளர்ச்சியடைந்த புழு கருமை நிற தலையைக் கொண்டிருக்கும். உடலின் மேற்பரப்பில் சிகப்புநிற புள்ளிகள் காணப்படும்.
  • அந்துப்பூச்சி சிகப்பு கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். இரண்டு இறக்கையிலும் பெரிய திட்டுகளும் மூன்று கரும்புள்ளிகளும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை

  • கைகளினால் புழுக்களை சேகரித்து அழிக்கலாம்.
  • வேப்பம்சாறு கொட்டை 5 சதம் தெளித்து காவடிப் புழுவின் முட்டை மற்றும் புழு பருவத்தை அழிக்கலாம்.
  • ட்ரைக்கோகிரைமா என்ற முட்டை ஒட்டுண்ணியை எக்டர்க்கு 50,000 வெளியிட்டு காவடிப்புழுவின் முட்டை குவியலை அழிக்கலாம்.
  • குவினால்பாஸ் அல்லது குளோர்பைரிபாஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • பறவை இருக்கையை ஏக்கர்க்கு 10 வீதம் அமைத்து காவடிப்புழுவின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.

 

Crop Protection - Castor crop_protection Castor

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015