பயிர் பாதுகாப்பு ::குசும்பா பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
காய்த்துளைப்பான்: ஹெலிகோவெர்பா ஆர்மிஜீரா |
தாக்குதலின் அறிகுறிகள்:
- இளம் புழு இலைகளையும், நுனிக்குருத்துகளையும் தாக்கி சேதப்படுத்தும்
- வளர்ச்சியடைந்த புழு காய்களைத் துளைத்து உட்சென்று திசுவை உண்கிறது
- சேதம் அதிகமாகும் நிலையில், புழு மொக்கு முழுவதையும் உண்டு சேதப்படுத்தும்
பூச்சியின் அடையாளம்:
- முட்டை: வெள்ளை நிறமாக இருக்கும், மற்றும் முட்டை தனித்தனியாக இடப்பட்டிருக்கும்
- புழு: பச்சைக் கலந்த பழுப்பு நிறத்தல் இருக்கும். உடலின் மேற்பரப்பில் வெள்ளை நிறக்கோடு காணப்படும்
- கூட்டுப்புழு: பழுப்பு நிறமுடையது, மண்,இலை மற்றும் காய்களில் காணப்படும்
- அந்துப்பூச்சி: பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். . முன் இறக்கைகள் ஆலிவ் பச்சை நிறத்திலிருந்து இளம் பழுப்பு நிறத்துடன், அடர் பழுப்பு நிற வட்ட வடிவ புள்ளி நடுவிலும் காணப்படும். பின் இறக்கைகள் இளம் புகை வெள்ளை நிறத்துடன், அகலமான கருப்பு நிற வெளி விளிம்புடன் காணப்படும்
|
|
|
|
புழு |
கூட்டுப்புழு |
அந்துப்பூச்சி |
|
கட்டுப்படுத்தும் முறை:
- கோதுமை அல்லது வார்கோதுமை ஆகியவற்றை ஊடு பயிராக பயிரிடலாம்
- ஊடு பயிராக கொண்டை கடலையை பயிர் செய்யக் கூடாது
- தேவைக்கு அதிகமான நைட்ரஜன் உரங்களைத் தவிர்க்க வேண்டும்
- Ha NPV வைரஸ் 250-300 புழு கரைசல்/எக்கடர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்இயற்கை எதிரிகளான காம்போலிடிஸ் குளோரிடே, எனிகோஸ்பில்லஸ் ஆகியவற்றை பயன்படுத்தி காய்ப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
|
|
|