பழ ஈ: பாக்ட்ரோசீரா டார்சாலிஸ்
சேதத்தின் அறிகுறி:
- புழு பாதி பழுத்த பழங்களை தாக்கி, மரத்திலிருந்து பழங்களை விழச்செய்யும்.
- தாக்கிய பழங்களில் நீர் வடியும்.
- பழத்தின் மேற்பகுதியில் பழுப்பு நிறத்தில் அழகிய திட்டுகள் காணப்படும்.
பூச்சியின் விபரம்:
- புழு கால் களற்று மஞ்சள் நிறமாக காணப்படும்.
- தாய்ப்பூச்சி பழுப்பு நிற கண்ணாடி போன்ற இறக்கைகளுடன் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
- பாதிக்கப்பட்ட பழங்களை பறித்து அகற்றி விட வேண்டும்.
- மரத்தைச் சுற்றி உழவு செய்து பழ ஈயின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
- மெத்தில் யூஜீனால் கவர்ச்சிப் பொறியை ஹெக்டேர்க்கு பத்து வீதம் வைத்து பழ ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
- பைரித்ரம் தண்ணீருடன் கலந்து தெளிக்கவும்.
- மாலத்தியான் 2 மிலி மருந்தை 1 லி தண்ணீருடன் கலந்து தெளித்தால் பழ ஈக்களை கட்டுப்படுத்தலாம்.
- ஒப்பியஸ் காட்பன்சேட்டஸ் மற்றும் ஸ்பாலஞ்சியா பிலிப்பைன்ஸ் போன்ற புழு ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தி புழு ஈக்களின் தாக்குதலை தடுக்கலாம்.
|