தண்டு துளைப்பான்: புளேக்கேடரஸ் பெருஜினஸ்
சேதத்தின் அறிகுறி:
- மரத்தின் கழுத்துப்பட்டை பகுதியில் சிறுசிறு துளைகள் தோன்றும்.
- மரத்திலிருந்து தேன் போன்ற திரவம் வடிவதை காணலாம்.
- மரத்தின் கழுத்துப்பட்டை பகுதியில் உள்ள சிறு துவாரங்களில் இருந்து புழுக்களின் கழிவுகள் வெளியே தள்ளப்பட்டிருக்கும்.
- இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்துவிடும்.
- மரக்கிளையின் குச்சிகள் காய்ந்து படிப்படியாக மரம் முழுவதும் காய்ந்துவிடும்.
பூச்சியின் விபரம்:
- தாய்ப்பூச்சி நடத்தர அளவிலும் பழுப்பு கலந்த சிவப்பு நிறத்திலும் காணப்படும்.
- தலை மற்றும் கழுத்துப் பகுதி கரும் பழுப்பு நிறத்தில் அல்லது கருப்பு நிறத்திலும் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
- தாக்கப்பட்ட பகுதிகளையும் காய்ந்த கிளைகளையும் நீக்கி அழித்தவிட வேண்டும்.
- நிலத்தை சுத்தமாக வைக்க வேண்டும்.
- தார் மற்றும் மண்ணெண்ணையை 1:2 என்ற கலவையில் தாக்கப்பட்ட பகுதியில் பூசவேண்டும்.
- மரத்தின் அடிப்பகுதியிலிருந்து 3 அடி உயரத்தில் கார்பரில் 50 டயில்யூபி 20 கிராம் மருந்தினை எடுத்து தாக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும். பின்னர் மரப்பட்டையை சுரண்டிவிட்டால் வண்டுகள் முட்டையிடுவதை தவிர்க்கலாம்.
- வண்டு சேதப்படுத்திய துளையிலிருந்து புழுவை அகற்றி பின்பு கார்போபியூரான் குருணை மருந்தை ஒரு துளைக்கு 5 கிலோ வீதம் செலுத்திய பின்பு களிமண் வைத்து துளையை அடைத்து விட வேண்டும்.
- தாக்கப்பட்ட துளையினுள் ஒரு செல்பாஸ் வில்லையை போட வேண்டும்.
|
|