இலைப்பிணைக்கும் புழு (அ) சிக்கூ அந்துப்பூச்சி: நெப்போடரிக்ஷி யூக்ராஃபில்லா
சேதத்தின் அறிகுறி:
- இலைகள் மெல்லிய நூலாம்பட்டையால் பிணைக்கப்பட்டு சுரண்டி தின்னப்பட்டிருக்கும்.
- இலைகள் காய்ந்தும் பிணைக்கப்பட்ட தண்டுகளில் காய்ந்த இலைகள் தொங்கிக் கொண்டு இருக்கும்.
- புழுக்கள் பூமொட்டுக்களுக்குள் துளையிட்டு பூக்களை உதிரச் செய்யும்.
பூச்சியின் விபரம்:
- முட்டை - மஞ்சள் நிறமாகவும் நீள்வட்ட வடிவிலும் காணப்படும்
- புழுக்கள் மங்களான சிவப்பு நிறத்தில் பக்கவாட்டில் கோடுகளுடன் இருக்கும்
- அந்துப்பூச்சி சாம்பல் நிறமாக கரும்புள்ளிகளுடன் காணப்படும்
|
|
Symptom |
Adult |
கட்டுப்படுத்தும் முறை:
- தாக்கப்பட்ட பழங்களை பிடுங்கி தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்
- சேதமடைந்த (அ) தாக்கப்பட்ட கிளைகளை அகற்றிவிட வேண்டும்
- பாசலோன் 35 இ.சி 2 மிலி / லிட்டர் (அ) பாஸ்பாமிடான் 40 எஸ்.எல. 2 மிலி / லிட்டர் (அ) வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம்.
|