கம்பளிப்புழு: மெட்டனாஸ்டிரியா ஹிர்டாகா
சேதத்தின் அறிகுறி:
- புழுக்கள் இலைகளை உண்ணும்.
- இலையுதிரல் காணப்படும்.
பூச்சியின் விபரம்:
- புழுக்கள் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் நீண்ட உரோமங்களுடன் கரும்புள்ளிகளுடன் காணப்படும்.
- பெண் பூச்சி பருமனாக சாம்பல் கலந்த பழுப்பு நிற இறக்கைகளுடன் காணப்படும்.
- முன் இறக்கையின் கருப்புத்திட்டில் ஒரு வெள்ளைப் புள்ளி இருக்கும்.
- பின் இறக்கைகள் வெள்ளை நிறத்தில் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
- களத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- முட்டை குவியலை எடுத்து அழிக்க வேண்டும்.
- மரத்தின் கழுத்துப்பகுதியில் கூட்டமாக தோன்றும் புழுக்களை தீயை மூட்டி அழிக்க வேண்டும்.
- குளோர்பைரிபாஸ் 20 இ.சி (அ) பாசலோன் 2 மி.லி / லிட்டர்.
- கார்பரில் 10டி பவுடரை கிளைகள் மீது போடலாம்.
- சால்சிடிட் குழவி, பிரக்கைமெரியா வகை தாக்கப்பட்ட தோட்டத்தில் விடலாம்.
Image Source:
http://www.nbair.res.in/insectpests/Metanastria-hyrtaca.php |