நாற்றழுகல் / வேரழுகல்: மேக்ரோபோமினா ஃபேசியோலினா
அறிகுறிகள்
- இந்நோயைக் தாக்கக்கூடிய பூசணம் சிறிய நாற்றுக்களையும் அதன் தண்டினையும் மென்மையாக மாற்றி அதை கீழே விழுந்துவிடச்செய்து, பின்னர் இறந்துவிடச்செய்கிறது.
- முதிர்ந்த நாற்றுக்களில், பழுப்பு மற்றும் கருப்பு நிறக்கருகல் தோன்றி பெரியதாசிப் பின்னர் தண்டினை பாதித்துச் செடியை இறந்துவிடச்செய்கின்றன.
கட்டுப்பாடு
- வயலில் நன்றாக தண்ணீரை வடிகட்டவேண்டும்.
- தாமாமாக பயிரிடவும்.
- நோயுற்ற செடியை அழிக்கவேண்டும்.
- விதையை திரம் + கார்பன்டாசிம் (0.05 சதவிகிதம்) என்ற அளவில் 1:1 என்ற விகிதத்தில் அல்லது 2 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.
- நோய் வெளியில் தெரிந்தவுடன், கார்பன்டாசிம் 1 கிராம் / லிட்டர் என்ற அளவில் மண்ணில் தெளிக்கலாம்.
- சூடோமோனஸ் ப்ளூரசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 2.5 கிலோ / எக்டர் என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் போடலாம்.
|
|