பயிர் பாதுகாப்பு :: எள் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
1. குருத்து இலைப்பிணைக்கும் புழு: ஆண்டிகேஸ்ட்டிரா கேட்டாலூனாலிஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்
- இளம் புழு இலையைப் பிண்ணி பிணைத்துக் கொண்டு அதனுள்ளிருந்து இலைகளையும், இளம் குருத்துகளையும் உண்டு சேதப்படுத்தும்.
- வளர்ச்சியடைந்த புழு மொக்கு மற்றும் காய்களை துளைத்து சென்று உண்டு சேதப்படுத்தும்
பூச்சியின் விபரம்
- புழு: இளம் பச்சை நிறத்திலிருக்கும், தலை கருமையாகவும், உடலின் மேற்பரப்பில் வெண்மை நிற ரோமங்கள் காணப்படும்
- அந்துப்பூச்சி: அந்துப்பூச்சி மிகவும் சிறியது, இளம் சிகப்பு கலந்த மஞ்சள் நிறத்திலிருக்கும்.
கட்டுபடுத்தும் முறை :
- வேப்ப எண்ணெய் 0.03% என்ற அளவில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
- பின்வரும் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்
- கார்ப்ரைல் 50 WP 1000 கி/எக்கடர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.
- வேப்பங் கொட்டை சாறு (5%)
- வேப்ப எண்ணெய் (இரண்டு முறை) 2%
- தொடர்ந்து ஒரே வகையான பூச்சிக்கொல்லியை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
|
|
|
|
|