தாக்குதலின் அறிகுறிகள்:
- இளம் புழு இலையைப் பிண்ணி பிணைத்துக் கொண்டு அதனுள்ளிருந்து இலைகளையும், இளம் குருத்துகளையும் உண்டு சேதப்படுத்தும்
- வளர்ச்சியடைந்த புழு மொக்கு மற்றும் காய்களை துளைத்து சென்று உண்டு சேதப்படுத்தும்
பூச்சியின் விபரம்:
- புழு: இளம் பச்சை நிறத்திலிருக்கும், தலை கருமையாகவும், உடலின் மேற்பரப்பில் வெண்மை நிற ரோமங்கள் காணப்படும்
- அந்துப்பூச்சி: பழுப்பு நிறமுடையது, முன் இறக்கையில் கருப்பு, பழுப்பு , மஞ்சள் வண்ண புள்ளிகளும் மற்றும் கோடுகளும் காணப்படும், பின் இறக்கையில் மஞ்சள் நிறக் கோடுகள் காணப்படும்
|
|
கட்டுப்படுத்தும் முறை:
- நிலத்தை ஆழமாக உழுது அந்துப்பூச்சியின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்
- கைகளினால் பச்சைக் கொம்பு புழுவைச் சேகரித்து அழிக்கலாம்.
- நடவு செய்த 30 மற்றும் 45 நாட்கள் கழித்து பாசலான் 4% அல்லது மாலத்தியான் 5% தூவி அந்துப்பூச்சியின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
|