தாக்குதலின் அறிகுறிகள்:
- குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சுகிறது. தாக்கப்பட்ட இலைகள் சுருண்டு விடுகிறது
- குஞ்சுகள் தேன் போன்ற கழிவு நீர் திரவத்தை இலைகளின் மேற்பரப்பில் சுரக்க செய்கிறது.
- இதனால் இலைகள் கேப்னோடியம் என்ற பூஞ்சையினால் கவரப்பட்டு கருமை நிறமாக மாறிவிடுகிறது.
பூச்சியின் விபரம்:
- அசுவினி: மஞ்சள் கலந்த கருமை நிறத்தில் இருக்கும்
கட்டுப்பாடு:
- இமிடோகுளோர்பிட் (5 கி/கி.கி விதை)மூலம் விதை நேர்த்திச்செய்த விதைகளை விதைக்க வேண்டும்
- நடவு செய்த 20,40 மற்றும் 60 நாட்கள் கழித்து மோனோகுரோட்டபாஸ் மற்றும் தண்ணீருடன் கலந்த கலவையை 1:4 என்ற விகிதத்திலும் அல்லது இமிட்டோகுளோர்பிட், தண்ணீர் கலந்த கலவையை 1:20 என்ற விகிதத்திலும் தண்டின் மேல் தெளிக்க (அ) வண்ணம் பூச வேண்டும்
|
|
|