கதிர்நாவாய் பூச்சி: கலோகொரிஸ் அங்குஸ்ட்டேட்டஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் பால் பிடிக்கும் தருணத்தில் கதிரை தாக்கி சேதம் விளைவிக்கும்
- தாக்கப்பட்ட கதிர்கள் மணி பிடிக்காமல் இருக்கும்
- கதிரைத் தட்டினால் ஏராளமான குஞ்சுகளும் வளர்ந்த பூச்சியும் ஓடுவதைக் காணலாம்
பூச்சியின் விபரம்:
- முட்டைகள்: உருண்டையாக, நீல நிறத்தில் இருக்கும்
- குஞ்சுகள்: பச்சை நிறத்தில் இருக்கும்
- நாவாய்பூச்சி: ஆண் நாவாய்பூச்சி பச்சை நிறத்திலும் தாய் பூச்சி பழுப்பு நிறத்திலும் இருக்கும்
|
கட்டுப்படுத்தும் முறை:
பொருளாதார சேத நிலை: 10/கதிர்
- கதிர் உருவாகிய 3 வது மற்றும் 18 நாட்கள் கழித்து கீழ்காணும் ஏதேனும் ஒர் மருந்தினைத் தெளிக்கவும்
- கார்பரில் 10 D 25 கிலோ/ ஹெக்டேர்
- மாலத்தியான் 5 D 25 கிலோ/ஹெக்டேர்
- வேப்பங்கொட்டைச்சாறு 5 சதம ்பாசலோன்
- மாலத்தையான் 50 EC 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்
|