பயிர் பாதுகாப்பு :: சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள்
 
சோளக்கதிர் ஈ: கான்டேரினா சொர்கிகோலா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • முட்டையிலிருந்து வெளிவரும் சிகப்புநிற புழுக்கள் பால் பிடிக்கும் கதிர்களை உண்டு சேதப்படும்.சோளக்கதிரின் மணிகளை அழுத்தினால் சிகப்பு நிற நீர் வெளிவரும்
  • தாக்கப்பட்ட மணிகள் சுருங்கிவிடும்
  • கதிர் பதராகிவிடும்.தாக்கப்பட்ட கதிர்களில் சிறிய துவாரங்கள் காணப்படும்

பூச்சியின் விபரம்:

  • ஈ:  சிறிய ஈயானது எளிதில் உடையக் கூடிய வகையினை ஆரஞ்சு நிற வயிற்றுப் பகுதியையும், ஒரு ஜோடி கண்ணாடி போன்ற இறகுகளையும் கொண்டிருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை:
  • விளக்கு பொறி அமைத்து அந்தப்பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்
  • கதிர் உருவாகிய 18 நாட்கள் கழித்து கீழ்காணும் ஏதேனும் ஒர் மருந்தினை தெளித்து சோளக்கதிர் தாக்குதலைக் குறைக்கலாம்
    • கார்பரில் 25 கிலோ / ஹெக்டேர்
    • மாலத்தியான் 25 கிலோ / ஹெக்டேர்
    • பாசலோன் 25 கிலோ/ ஹெக்டேர்
  • வேப்பங் கொட்டைச் சாறு 5% (அ) மாலத்தையான் 50 EC @ 1600 மி.லி/ஹெக்டேர் (அ) பாசலான் 1150 மி.லி/ஹெக்டேர்
  • சோளத்தை முடிந்த வரை குறுகிய காலத்தில் விதைத்து பூக்களை சமநிலையில் பூக்க வைப்பதால் சோளக் கதிர் ஈ மற்றும் கதிர் நாவாய்ப்பூச்சி பெருக்கத்தை தடுக்கலாம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015