ஆல்டர்னேரியா இலைப்புள்ளி: ஆல்டர்னேரியா டெனுசியாமா
அறிகுறிகள்
- விதைகள் சிறியதாகவும் உதிர்ந்தும் காணப்படும். அடர்ந்த, ஒழுங்கற்ற, பரவும் புள்ளிகள் போன்ற அறிகுறிகள் விதையில் காணப்படுகின்றன.
- பழுப்பு நிற தோற்றமுடைய, இறந்த புள்ளிகளைக் கொண்டு வட்ட வளைய அறிகுறிகளை இலையில் கொண்டுள்ளன. இவை ஒன்று சேர்ந்து பெரிய இறந்த பகுதிகளை உருவாக்குகின்றன.
- பாதிக்கப்பட்ட இலைகள் பின்னர் காய்ந்து, உதிர்ந்து விடுகின்றன.
கட்டுப்பாடு
- தரமான, நல்ல விதைகளை பயன்படுத்தவேண்டும்.
- பழைய செடியின் கழிவுகளை அகற்றவேண்டும்.
- விதையை திரம் + கார்பன்டாசிம் (2:1) 3 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.
- மேங்கோசெப் அல்லது காப்பர் பூசணக்கொல்லியை (கார்பன்டாசிம் 1 கிலோ / லிட்டர்) என்ற அளவில் பயன்படுத்தவும்.
|
|
|