பயிர் பாதுகாப்பு :: சோயாபீன் பயிரைத் தாக்கும் நோய்கள்

சார்கோல் அழுகல் / உவர் வேரழுகல்: மேக்ரோபோமினா பேசியோலினா

அறிகுறிகள்

  • நோயுற்ற செடியின் தண்டுப்பகுதியில் வெள்ளி பூசியது போன்ற வெண்மையான பூசண வளர்ச்சியைக் காணலாம்.
  • இவ்வளர்ச்சியில் எண்ணற்ற மிகச்சிறிய கரும்புள்ளிகள் பதிந்திருப்பதைக் கூர்ந்து நோக்கின் மிகத் தெளிவாகக் காணலாம்.
  • இந்நோய் வருடம் முழுவதும் தோன்றிய போதிலும் வறட்சி காலங்களில் மிகுதியாகக் காணப்படுகிறது. இளம் நாற்றுப் பயிர்களிலும் இலைகளிலும் அறிகுறி காணப்படுகிறது. நோயறற செடியைப் பிடுங்கிப் பார்த்தால் இதன் வேர்கள் அழுகியிருப்பதைக் காணலாம்.
  • நீர் பாயும் கோடைக்காலப்பயிர் பயிரிடாத பருவத்தில் இந்நோய் அதிகமாகவும், இப்பயிரை பயிரிடப்படும் பருவ காலத்தில் இந்நோய் குறைந்தும் காணப்படும்.
  • பூத்தபின்பு நோய் தோன்றியிருப்பின் காய்களில் குறைந்த எண்ணிக்கையில் பயறுகள் இருப்பதையோ அல்லது மிகச்சிறிய முற்றாத சுருங்கிய பயறுகள் இருப்பதையோ காணலாம்.
கட்டுப்பாடு
  • முந்திய பயிரின் கழிவுகள் ஆழமாகப் புதைக்கப்பட்டு மக்கச்செய்தால் தோன்றுவது குறையும்.
  • விதையை டி. விரிடி 4 கிராம் / கிலோ அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் / கிலோ அல்லது சூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ் 4 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்தால் நோயின் தாக்கத்தை குறைக்கலாம்.

soyabean


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015