கழுத்தழுகல் / ஸ்கிலிரோசியல் கருகல்: ஸ்கிலிரோசியம் ரால்ஃப்சி
அறிகுறிகள்
- இந்நோய்க்கான அறிகுறி மண்ணின் மேற்பரப்பிற்கு சற்று கீழ் காணப்படுகிறது.
- முதல் அறிகுறியான செடிகள் வாடியும், மஞ்சள் நிறமாக மாறியும் காணப்படுகிறது.
- லேசான பழுப்பு நிறக்கோடுகள், பெரியதாகி, தண்டுகள் உடைந்துவிடுகின்றன.
- இலைகள் பழுப்பு நிறமாக மாறியும், காய்ந்தும், தண்டின் பாகங்கள் இறந்தும் காணப்படுகின்றன.
- பாதிக்கப்பட்ட இடத்தில் வட்டவடிமுள்ள ஸ்கிலிரோசியா காணப்படுகிறது.
கட்டுப்பாடு
- கோடையில் ஆழமாக உழவேண்டும்.
- மக்காச்சோளம் அல்லது சோளத்துடன் பயிர் சுழற்சி செய்தல்வேண்டும்.
- முன் பயிரின் கழிவுகளை அகற்றவேண்டும்.
- விதையை டி.விரிடி அல்லது டி. ஹார்சியானம் 5 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம். இதனைத் தொடர்ந்து மண்ணில் 5 கிலோ / எக்டர் என்ற அளிவல் விதைத்த 30 நாள் கழித்து இதை இடலாம்.
- விதையை கேப்டான் / திரம் + கார்பன்டாசிம் (2:1) 3 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.
|
|
|