பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
கரையான்: ஓடனோடெர்மஸ் ஓபிசஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- வளரும் கரும்பின் சோகையின் ஓரங்களில் அரை வட்டமாக கரையான் கடித்தது போல் தென்படும்
- நடவு செய்த கரணைகள் சரியாக முளைக்காமல் இருக்கும்
- முதலில் வெளிப்புற இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து போதல் பின்பு உட்புற இலைகளும் காய்தல்
- இறுதியில் முழுக்குருத்தும் காய்ந்து இழுக்கும்போது கையோடு வந்து விடுதல்
- விதைக் கரணைகள் உட்புறத் திசுக்களின்றி கரையான் மண் காணப்படுதல், கரும்பு முழுவதும் காய்ந்து போதல் போன்றவை கரையான் தாக்குதலின் அறிகுறிகளாகும்
பூச்சியின் விபரம்
- பழுப்பு கலந்த வெண்ணிற எறும்பு போன்ற சிறு பூச்சிகள், தலை அடர் நிறத்தில் காணப்படும்
கட்டுப்பாடு:
- வயல் மற்றும் வரப்புகள் நிரம்ப தண்ணீர் கட்டுவதன் மூலம் கரையான தாக்குதலைத் தவிர்க்கலாம்
- விதைக்கரணையை நடுவதற்கு முன்பு இமிடோகுளோர்பிட் 70 WS 0.1 சதம் அல்லது குளோர்பைரிபாஸ் 20EC 0.04 சதம் மருந்தினுள் நனைத்து எடுக்க வேண்டும்.
- பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்:
- குளோரோடேரேநிலிபுருள்18.5 % SC 500-600 மி.லி/ஹெக்டர்
- இமிடாகுளோபிரிட் 17.8% SC 350 மி.லி/ஹெக்டர்
- குளோரோனபரிபாஸ் 20% EC 705 மி.லி/ஹெக்டர்
|
|
|
|
|