பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இலை தத்துப்பூச்சி: பைரில்லா பெர்ப்பூசில்லா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து உதிர்ந்துவிடும்
  • குஞ்சுகளும் வளர்ந்த பூச்சியும் இலைகளின் அடிப்புறத்தில் அமர்ந்து கொண்டு சாறை உறிஞ்சும்
  • குஞ்சுகள் தேன் போன்ற திரவத்தை இலைகளில் சுரக்கச் செய்வதால் இலைகள் பூஞ்சாணத்தால் கவரப்பட்டு கருமை நிறமாக மாறிவிடும்

பூச்சியின் விபரம்:

  • குஞ்சுகள்: ஆரஞ்சு நிறத்திலிருக்கும், குஞ்சுகளின் பின்பகுதியில் வால் போன்ற அமைப்பு காணப்படும்
  • தத்துப்பூச்சி: வளர்ந்த தத்துப்பூச்சி மஞ்சள் நிறத்திலும் கூரிய மூக்குடனும் காணப்படும்

கட்டுப்பாடு:

  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்
    • குயின்லாபாஸ் 25% EC 1200 மி.லி/ஹெக்டர்
    • கார்போபியுரான் 3% CG 33.3 கி.கி/ஹெக்டர்

 

 

பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015