பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
வெள்ளை ஈ: அலிரோலோபஸ் பாரோடென்சிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • தாக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • குஞ்சுகள் தேன் போன்ற திரவத்தை இலைகளில் சுரக்கச் செய்வதால் இலைகள் பூஞ்சாணத்தால் கவரப்பட்டு கருமை நிறமாக மாறிவிடும்


பூச்சியின் அடையாளம்:

  • முட்டை: சோகைகளின் அடிப்பகுதியில் முட்டைகள் இடப்பட்டிருக்கும். சிறிய வளைந்த காம்புடன் மஞ்சள் நிறமான முட்டைகள் இடப்பட்ட 2 மணி நேரத்தில் இது கருப்பு நிறமாக மாறிவிடும்
  • குஞ்சுகள்: முதலில் வெளிர் மஞ்சள் நிறத்துடனும், பிறகு பளபளப்பான கருப்பு நிறமாக காணப்படும்.
  • முதிர்ந்த பூச்சி: வெளிர் மஞ்சள் நிற உடலில் இறக்கைகள் மெழுகினால் சூழப்பட்டிருக்கும்

 

 

 

வெள்ளை ஈ

கட்டுப்பாடு:

  • தேவைக்கு அதிகமான பசுந்தாள் உரங்கள் பயன்படுத்துதலைத் தவிர்த்தல் வேண்டும்
    கூட்டுப்பழு ஒட்டுண்ணிமான அசோடஸ் டேளகேளசிஸ் மற்றும் என்கேரிசியா இசக்கி பயன்படுத்தலாம்
  • சைலோகோரஸ் நைக்ரேட்டஸ்,சைமஸ் நுபிலஸ் போன்ற இயற்கை எதிரிகளை பயன்படுத்தி வெள்ளை ஈயை கட்டுப்படுத்தலாம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015