பயிர் பாதுகாப்பு :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
தலைத் துளைப்பான்: ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜெரா |
அறிகுறிகள்:
- தலை பகுதியின் உள்ளே புழு துளை செய்தல்
- நன்றாக வளர்ந்த விதைகளின் மீது புழுக்கள் உண்டு, தலை பகுதியை துளை செய்யும்.
- பூஞ்சான் உருவாகி, தலைப்பகுதி அழுக ஆரம்பிக்கும்
- வளர்ச்சியின் ஆரம்பநிலையில் புழுக்கள் இலைகளை அதிகமாக உண்ண ஆரம்பித்து பின் தலைப்பகுதியைத் துளைக்கும்
|
|
|
|
இலைகளை உண்ணும் புழுக்கள் |
விதைகளை உண்ணும் புழுக்கள் |
புழு துளை செய்தல் |
|
பூச்சியின் விபரம்:
- முட்டைகள்: உருளை வடிவத்தில், பால் வெள்ளை நிறத்தில், தனித்தனியாக முட்டை இடும்.
- புழு: பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறமாக தோற்றமளிக்கும். உடலின் மீது அடர் பழுப்பு சாம்பல் நிற வரிகளும், அடர் மற்றும் மங்கிய நிற வளையங்களும் காணப்படும்.
- கூட்டுப்புழு: பழுப்பு நிறத்தில் மண், இலை, காய் பயிர் குப்பைகளில் காணப்படும்
- பூச்சி :பின் இறக்கைகள் இளம் புகை வெள்ளை நிறத்துடன், அகலமான கருப்பு நிற வெளி விளிம்புடன் காணப்படும்.
- இளம் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில், தடித்து காணப்படும். முன் இறக்கைகள் ஆலிவ் பச்சை நிறத்திலிருந்து இளம் பழுப்பு நிறத்துடன், அடர் பழுப்பு நிற வட்ட வடிவ புள்ளி நடுவிலும் காணப்படும்.
|
|
|
கட்டுப்பாடு :
- ஊடு பயிராக பச்சைப் பயிறு, உளுந்து, கடலை, சோயாபீன் பயிரிடலாம்.
- 3-4 வரிசைகள் மக்காச்சோளம் (அ) சோளம் சூரியகாந்தி பயிரைச் சுற்றி விதைக்கலாம்
- பொறிப் பயிர்களாக துலக்கமல்லி 50 செடிகள் / ஏக்கர் என்ற அளவில் விதைக்கலாம்
- இனக்கவர்ச்சிப் பொறி 4 பொறிகள் / ஏக்கர் வைத்துக் கட்டுபடுத்தலாம்
- விளக்குப்பொறி (1 விளக்குப் பொறி / 5 ஏக்கர்) என்ற அளவில் வைக்கலாம்
- இரை விழுங்கிகளான காக்சி நெல்லி டிஸ், கிரைசோபெர்லா கார்னியா 1 புழு/தலை என்ற அளவில் வயலில் வெளியிடலாம்
- ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிராமா (20,000/ஏக்கர்) பிரக்கான் வகைகள், கேம்போலெட்டிஸ் வகைகளை வயலில் வெளியிடலாம்.
- ஹெச். என். பி.வி 250 எல்.இ. + பிடி 0.5 கிலோ /ஹெக்டர் என்ற அளவில் தெளிக்கலாம்
- ஹெச். என். பி.வி 250 எல்.இ. + 1 கிலோ கரும்பு சர்க்கரை + 200 மி.லி. சேண்டோவிட் (அ) பீபால் கலந்து மாலை வேளைகளில் மட்டும் தெளிக்கலாம்
- 5% வேப்ப எண்ணெய் (அ) 5% வேப்பங்கொட்டை சாறு முட்டை இடுவதற்கு முன் தெளிக்கவும்
|
|
|