பயிர் பாதுகாப்பு :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
பீகார் கம்பளிப் பூச்சி : ஸ்பைலோசோமா அப்லிக்வா |
அறிகுறிகள்:
- இளம்புழுக்கள் இலையின் அடிப்பகுதியில் காணப்படும். இலை மிகத் தீவிரமாக இலைகளை உண்ணும்.
- தீவிரத் தாக்குதலின் போது இலைகள் உதிர்ந்துவிடும்
- தாக்கப்பட்ட இலைகள் காய ஆரம்பிக்கும்
பூச்சியின் விபரம்:
- முட்டை: இலையின் அடிப்புறத்தில் கூட்டமாக இடப்படும்
- புழு: நீளமாக மஞ்சள் முதல் கருப்பு நிறமுடன் முடிகளால் சூழப்பட்டிருக்கும்
- பூச்சி: பழுப்புநிறத்துடன், சிவப்பு நிற வயிறுடன் காணப்படும்.இளஞ்சிவப்பு நிற இறக்கைகளுடன், எண்ணற்ற கரும்புள்ளிகளுடன் காணப்படும்.
கட்டுப்பாடு:
- ஆழமாக கோடை உழவு செய்தல்
- நன்றாக மக்கிய உரங்களை பயன்படுத்துதல்
- பட்டாணி பயருடன் 2:1 என்ற விகித்தில் ஊடு பயிரிடலாம்
- புழுக்களை சேகரித்து, அழிக்க வேண்டும்.
- பேசலோன் 35 கிகி 1000 மிலி/ஹெக்டர் என்ற அளவில் தெளித்தல்
|
|
|
|