பயிர் பாதுகாப்பு :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
புகையிலைப் புழு : ஸ்போடாப்டிரா லித்தூரா |
அறிகுறிகள்:
- இளம் இலைகள், கிளைகள், இதழ்களை உண்ணும்
- பின் வயல் முழுவதும் பரவி, இலைகள் உதிரும்
- வளர்ந்த விதைகளை புழுக்கள் உண்ணும்
பூச்சியின் விபரம்:
- முட்டை: கூட்டமாக உள்ள முட்டைகள் தங்கம் கலந்த பழுப்பு நிறத்தில் தோற்றமளிக்கும்
- புழு: இளம் பச்சை நிறத்துடன் அடர் குறிகளுடன் காணப்படும். இளம் நிலையில் தீவிரமாக உண்ணும்
- பூச்சி: முன் இறக்கைகள்: பழுப்பு நிறத்தில், அலை போன்ற வெள்ளை நிற குறிகளுடன் காணப்படும். பின் இறக்கைகள்: வெள்ளை நிறத்தில், விளிம்புகளில் பழுப்பு நிற திட்டுக்களுடன் காணப்படும்
கட்டுப்பாடு:
- முட்டைகளை சேகரித்து, அழித்தல்
- பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்:
- டைகுளோரோவாஸ் 76 EC 500 மி.லி/ஹெக்டேர்
- பாசலான் 35 EC 1000 EC 705 மி.லி/ஹெக்டேர்்
- பாசலான் 4 D 25 கி.கி/ஹெக்டேர்
- மாலை 4 மணிக்கு பிறகு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும் ஏனேனில் அந்த நேரத்தில் தேனீக்கள் வரவு குறைவாக இருக்கும்
- பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்க மருந்து (NAA) தெளித்த நாளில் பூச்சிக்கொல்லியை தெளிக்க வேண்டாம்
|
|
|
புழு |
பூச்சி |
|
|
|