கிழங்கு அழுகல் நோய்:
அறிகுறிகள்:
- அழுகல் நோய் வேர் பகுதியில் காணலாம் மற்றும் இந்நோயின் பாதிப்பு வேறு பகுதிகளிலும் ஏற்படும்.
- வறண்ட நிலையில் அழுகல் நோயைத் தடுக்கலாம். ஆனால், ஈரப்பத நிலையின் போது வள்ளி கிழங்குகளிலிருந்து நீர் கோத்துவிடும். சில நாட்களிலேயே வேர் பகுதி முழுமையாக அழுகிவிடும்
- அதிகமான ஈரப்பத நிலையின் போது, கிழங்குகளில் கரும் பூஞ்சான்கள் அடர்த்தியாக காணப்படும். இவ்வகையான ரைசோபஸ் அழுகல் பூஞ்சான்களை மற்ற வகையான அழுகல் நோயிலிருந்து வேறுபடுத்தி காணலாம்.
- நோய் தாக்கத்தினால், வேர் பகுதி நிறம் மாறாதலால் குறிப்பிட இயலாது. ஆனால் வேர் பகுதியில் ஏற்படும் நாற்றத்திற்கு பழ ஈக்கள் அப்பகுதிக்கு ஈர்க்கப்படுகின்றன.
- கிழங்குகளை கிடங்குகளிலோ அல்லது போக்குவரத்தின் போது ஏற்படும் ஈரப்பத நிலை 75 – 85 சதவீதமாக இருப்பதனால் வேர் பகுதிகள் எளிதில் பாதிக்கப்படுகின்றன. சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் அதிக குளிர் மற்றும் வெப்ப நிலையிலும் எளிதில் கழுவுதல் பையிலிட்டு சந்தைக்கு செல்வதற்குள் எளிதில் அழுகல் நோய் தாக்கி அழித்துவிடும்
கட்டுப்பாடு:
- அறுவடையின் போதுக் கிழங்குகளில் வெட்டுகள் ஏற்படாதவாறு தடுக்க வேண்டும். இதனால் அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
- அறுவடைக்குப் பின் வேர் பகுதிகளை சுத்தமாக வைக்க வேண்டும்
- 50-600 செ என்ற வெப்ப நிலையில் கிழங்குகளை கிடங்குகளில் வைக்கவும்.
- வேறுடன் இருக்கும் கிழங்குகளை சேமிப்புக் கிடங்கில் வைக்காமல் இருப்பதன் மூலம் வெட்டுகளிலிருந்து தவிர்க்கலாம்.
- அறுவடை செய்தபின் பூஞ்சான் கொல்லியினை உபயோகிக்க வேண்டும்
- சர்க்கரைவள்ளி கிழங்குகளை அதிக நேரத்திற்கு சூரிய வெப்பதிலோ அல்லது குளிர் நிலையிலோ அனுமதிக்கக்கூடாது
|
|