சாம்பல் நோய்: எரிசிபெ கைகோரெசியாரம் வகை நிக்கோட்டியானே
அறிகுறிகள்
- முதலில் சாம்பல்நிறம் கலந்து வெண்மையான புள்ளிகள் கீழ் இலையின் அடிப்பாகத்தில் காணப்படுகிறது.
- குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக குளுமையான நேரத்தில் இப்புள்ளிகள் மேல் இலைகளுக்க பரவி இலை முழுவதும் காணப்படுகிறது.
- இவ்வாறான இலைகள் பதப்படுத்தப்படும் போதும் எரிந்தும் பழுப்பு நிறத்திலும் காணப்படுகிறது.
கட்டுப்பாடு
- அதிகமான உரம் மற்றும் அதிகமாக செடிகளைத் தவிர்க்கவும். பாதிக்கப்பட்ட அடி இலைகளை அகற்றவும்.
- சற்று முன் பருவத்திலேயே நடவு செய்யவேண்டும்.
- கந்தகத் தூளை 40 கிலோ / எக்டர் என்ற அளவில் சாம்பல் அல்லது மணலுடன் கலந்த நட்ட 6 முதல் 8 வாரத்திற்குள் பயன்படுத்தலாம்.
- 0.2 சதவிகிதம் கராத்தேன் அல்லது தியோவிட் அல்லது 0.05 சதவிகிததம் கார்பன்டாசிம் ாநய் உருவாகும் முன் 10-12 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.
- நோய் எதிர்ப்புத்தன்மை உடைய இரகங்களான ஸ்வர்ணா அல்லது லைன் 2359 பயிரிடலாம்.
|