பழுப்பு இலைப்புள்ளி நோய்: அல்டர்னேரியா லாங்கிபஸ்
அ.டெனுயிஸ் அ.அல்டர்னேட்டா
அறிகுறிகள்
- இந்நோய் நடவு வயலில் அதிகமாக காணப்படுகிறது.
- இந்நோய் அடியில் உள்ள இலைகளிலும் பின்பு முதிர்ந்த இலைகளிலும் சிறிய பழுப்பு நிற கோடுகளாக காணப்படுகின்றன. இவை மேல் உள்ள இலைகளுக்கும் இலைக்காம்புக்கும், காய்களுக்கும் பரவுகின்றன.
- வெப்பமான காலநிலையில், அதிக ஈரப்பதம் உள்ள இடங்களில் இப்புள்ளிகள் பெரியதாக பழுப்பு நிறமாக மாறி வெளிப்புற கோடுகளை தேரற்றுவிக்கின்றன.
- அதிகமாக பாதிக்கப்பட்ட இலைகளில் புள்ளிகள் பழுப்பு நிறமாகவும், பெரியதாகவும் மாறுகின்றன.
- முதிர்ந்த நிலைகளை அடையும் இலைகளில் இலைப்புள்ளிகள் அடர்ந்த மஞ்சள் நிறத்தை புள்ளியைச் சுற்றிலும் தோற்றுவிக்கின்றன. இதற்கு காரணம் அல்டரின் எனப்படும் ஒரு வகை நச்சுத்தன்மை உடைய பொருளை இப்பூஞ்சான் உற்பத்திசெய்வதால்.
கட்டுப்பாடு
- பாதிக்கப்பட்ட செடிகளை முதலில் அகற்ற வேண்டும்.
- அதிகமாக பாதிக்கப்பட்ட வயல்களில் மீண்டும், மீண்டும் புகையிலை விளைவிப்பதை தவிர்க்க வேண்டும்.
- பூசணக்கொல்லியான மேனப் 0.2% வாராவாரம் தெளிப்பதன் மூலம் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்.
|
|