புகையிலையின் இலைச்சுருட்டை நோய்: புகையிலை இலைச்சுருட்டை நச்சுயிரி
அறிகுறிகள்
- நோயினால் பாதிக்கப்பட்ட செடி குட்டையாக இருக்கும். இலைப்பரப்பளவு பெருகாமல் சிறுத்து விடுவதுடன் சுருக்கமுற்றுக் காணப்படும்.
- இலையின் ஒரு பகுதியோ முழுதுமோ சுருட்டையாகியிருக்கும்.
- இலைகள் தடித்து ஒடியும் தன்மையுடையதாகவும் இலைகளின் ஓரங்கள் கீழ்நோக்கிச் சுருண்டும் இருக்கும்.
- இலை நரம்புகள் அடர்பச்சையாகவும் பெருத்தும் காணப்படும்.
- இலை நரம்புகளின் அடிப்பாகத்தில் வெளி வளர்ச்சியும் காணப்படும்.
கட்டுப்பாடு
- இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடிகள் மற்றும் நாற்றுக்களை வயல்களில் பார்த்தவுடன் களைந்தெரிய வேண்டும்.
- நோய் தாக்காத ஆரோக்கியமான நாற்றுக்களை வைத்து இடத்தை நிரப்ப வேண்டும்.
- அதிகமான நோய் தாக்கிய இடங்களில் சணப்பையை வேளிப்பயிராக பயிரிட வேண்டும்.
- ஒரு ஹெக்டருக்கு பண்ணிரெண்டு மஞ்சள் பொறியை (ஆமணக்கு எண்ணெய்யை தடவி) பொருத்த வேண்டும்.
- முதல் தெளிப்பு : குளோர்பைரிபாஸ் 20% @ 25 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும்.
- இரண்டாவது தெளிப்பு : மோனோகுரோட்டோபாஸ் 36% @ 15 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
- மூன்றாவது தெளிப்பு : அசிடேட் 75% @ 10 கிராமை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
- நான்காவது தெளிப்பு : டெமட்டான் - எஸ் மீதைல் 25% @ 15 மில்லியை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
- மாலை நேரங்களில் இம்மருந்தை தெளிக்க வேண்டும்.
|
|