பயிர் பாதுகாப்பு :: மரவள்ளி பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
வெள்ளை ஈ: பெமீசியா டபாசி
தாக்குதலின் அறிகுறிகள்:
- முதலில் வெண்புள்ளிகள் தோன்றி பிறகு அவை ஒன்றாக இணைத்து மஞ்சள் நிறமாக மாறிவிடும்
- கடுமையாக தாக்கப்பட்ட செடிகளை முதிரா நிலையில் இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிடும்
- கரும்புகை பூசணத்தை ஏற்படுத்தும்
- நரம்பு வெளத்தல் மஞ்சள் நரம்பு தேமல் நோய்யை பரப்புகின்றது.
- மரவள்ளிதேமல் நோயை பரப்பும்
பூச்சியின் விபரம்:
- முட்டை: இளந்தளிர் இலைகளின் அடிப்பகுதியில் காம்புடைய, பெரிப் பழம் வடிவில், வெளிர்மஞ்சள் நிற முட்டை காணப்படும்.
- இளம்குஞ்சுகள்: முட்டை பொரித்தவுடன் வெளிவரும் இளம் குஞ்சுகள் நீள வட்ட வடிவில் மரவும் பூச்சி போன்று பச்சை கலந்த வெள்ளை நிறத்துடன் இருக்கும்.
- முதிர்பூச்சிகள்: சிறு வெண்ணிற பூச்சிகள், இலைகளில் அடைஅடையாக மாவுப்பூச்சிகளை போன்று காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
- துத்தி (அபுட்லான் இண்டிகம்) செடிகளை வயலிருந்து அகற்ற வேண்டு்ம்.
- மஞ்சள் நிற ஒட்டும் பொறிகன்ள கொண்டு வெள்ளை ஈயை கட்டுப்படுத்தலாம்.
- பின்வரும் பூச்சிக்கொல்லிகள் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்
- ஃபாசலோன் 35 EC @2.5 லிட்டர்/ஹெக்டேர்
- குவினால்பாஸ் @2.0 லிட்டர்/ஹெக்டேர்
- ட்ரைஅசோஃபாஸ் @2.0 லிட்டர்/ஹெக்டேர்
|
|
|
|
|