இளஞ்சிவப்புச் சிலந்தி: அக்கேள்பில்லா தியே
சேதத்தின் அறிகுறிகள்:
- சிலந்தியின் தாக்கம் நுணியிலிருந்து இரண்டு மூன்று இலைகள் மற்றும் இளம் தளிர்களில் அதிகமாக இருக்கும்
- இளந்தளிர்கள் தோல் போல் கடினமாகி பின்னர் வாடிக் காணப்படும்
- இலைகள் அடிபுறமாக சுருண்டு காணப்படும்
- இடைக்கணுக்கள் குறுகிவிடும்
- செடிகள் வளர்ச்சிக் குன்றிக் காணப்படும்
பூச்சியின் விபரம்:
- ஆண் சிலந்தி சிறியது, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்
- பெண் சிலந்தி மஞ்சளானது, ஆணை விட சிறியது
கட்டுப்படுத்தும் முறைகள்:
- கீழ்க்காணும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை பயன்படுத்தவும்
- எதியோன் 50 EC 2 மி.லி./லிட்டர் தண்ணீர்
- அஜாடிராக்டின் 5 EC 200 மி.லி./எக்டர்
- டைகோபோல் 18.5 EC 1250 மி.லி./எக்டர்
- ஃபெனக்சாகுயின் 10 EC 1000 மி.லி./எக்டர்
- ஃபென்பிராக்சிமேட் 5 EC 300 - 600 மி.லி./எக்டர்
- ஃபுளுமைட் 20 SC அல்லது ஃபுளுபென்னஜைன் 20SC 400 – 500 மி.லி./எக்டர்
- பாசோலோன் 35 EC 1028 மி.லி./எக்டர்
- புரோபார்கைட் 57 EC 750 - 1250 மி.லி./எக்டர்
- 1 லிட்டர் நீருக்கு 2 கிராம் நனையும கந்தகம் தெளிக்க வேண்டும்.
|
|