மஞ்சள் கரையான: பாலிபேகோடேர்ஸோனிமஸ் லேட்டஸ்
- பல வகையான பயிர்களை (தக்காளி, சின்கோனா, பருத்தி, பயிறு வகைகள், உருளைக் கிழங்கு, மிளகாய்) தாக்குகின்றன.
அறிகுறிகள்:
- இளம் இலைகளில் முக்கியமாக நுனியில் உள்ள இரண்டு (அ) மூன்று இலைகள் மற்றும் மொட்டுக்களில் காணப்படும்.
- தாக்கப்பட்ட இலைகள் சொரசொரப்பாகி, உடையும் நிலையில் சொறி போன்ற வரிகளுடன் காணப்படும்.
- இலைகள் கீழ் நோக்கி வளைதல்.
- இடைக்கணுக்கள் குட்டையாகின்றன.
- கிளைகள் – குட்டை வளர்ச்சியுடன், உருமாறி இருக்கும்.
புச்சியின் விபரம்:
- ஆண் பூச்சிகள் சிறியதாக, வெள்ளையிலிருந்து இளம் மஞ்சள் நிறம் வரை காணப்படும்.
- பெண் பூச்சிகள் மஞ்சள் நிறத்தில், ஆண் பூச்சியை விட பெரியதாக இருக்கும்.
- மஞ்சள் கரையான்கள் அதிக நடமாட்டத்துடன், வேகமாக நகரக்கூடியதும் ஆகும்.
கட்டுப்பாடு:
- டைக்கோபால் 18கிகி 2மிலி/லிட்டர் (அ) எத்தியான் 50 கிகி 2மிலி/லிட்டர்் தெளித்தல்.
- நனையும் கந்தகம் 80wp 2கிராம்/லிட்டர். கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கவும்.
|
|
இலைகள் கீழ் நோக்கி வளைதல் |
|