காவடிப்புழு: புசுரா சப்ரசேரியா
சேதத்தின் அறிகுறிகள்:
- இலைகள் முழுவதும் புழுக்களால் கடித்து சேதப்படுத்தப்பட்டிருக்கும்
பூச்சியின் விபரம்:
- புழு: கரும்பழுப்பு நிறத்துடன் வெளிர் மஞ்சள் கலந்த வெண்ணிற கோடுகளுடன் காணப்படும்
- பூச்சி: அந்துப்பூச்சியின் சாம்பல் நிற இறகுகளில் பழுப்பு நிற வளைந்த கோடுகள் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- வேப்பம் கொட்டை வடி நீர் 5 சதம் அல்லது வேம்பு வகை பூச்சிக்கொல்லி திரவங்களை பயன்படுத்தவும்
- பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்கவும்: பாஸோலான் அல்லது குளோர்பைரிஃபஸ் அல்லது மாலத்தியான் 2மி.லி / லிட்டர்அல்லது டெல்டாமெத்ரின் 2.8 EC 10 – 150 கிராம்/எக்டர்
|
|