பயிர் பாதுகாப்பு :: தேயிலை/டீ பயிரைத் தாக்கும் நோய்கள்

பாசி குறிய இலை புள்ளி: செபாலுரஸ் வைரேச்சென்ஸ்

சேதத்தின் அறிகுறி:

  • இலைகளில்  வட்ட வடிவில் , ஊதாவிலிருந்து  சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் புண்கள்  எழும்பி இருக்கும்.

வாழ்க்கை சுழற்சி :

  • பாசி  நுண்ணிய, துரு நிற மற்றும்  பூசனம்  போன்ற  புள்ளிகளை   இலையின்  மேற்பரப்பில் உருவாக்குகிறது . அது  சிவப்பு சாயங்களை போல  காணப்படும்.
  • பூசன  வித்து  காற்று அல்லது மழை மூலம் பரவுகிறது .
  • பாசி இலைகளில் இருந்து கிளைகள் மற்றும் பழத்திற்குப்  பரவலாம்.
  • மோசமான  மண் வடிகால், சமநிலையற்ற ஊட்டச்சத்து , உயர் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் உள்ள தேயிலை செடிகள் பாசி இலைப்புள்ளி தொற்று நோயால்  பாதிக்க படுகிறது . எனவே  முறையான சாகுபடி மற்றும்  கருத்தரித்தல்  மூலம் தாவரத்தை பலப்படுத்துதல் முக்கியம்
  • பெரும்பாலான பாசி புள்ளிகள் இலைகளின்  மேற்பரப்பில் வளர்கின்றன.
  • பழைய தொற்று பச்சை கலந்த சாம்பல் ஆக தோல்் போல் இருக்கும். செபாலுரஸ் பொதுவாக தாவரதிற்கு தீங்கு விளைவிக்காது .

 


வட்ட வடிவ புண்கள்
கட்டுப்படுத்தும் முறை:
  • தாவரத்திற்கு அழுத்தம் இல்லாத சூழ்நிலையை அமைக்க வேண்டும்.
  • மோசமான வறண்ட நிலத்தை  தவிர்க்க வேண்டும்.
  • தேயிலை செடிகள் மத்தியில் நல்ல காற்றோடத்தின் மூலம் ஈரப்பதம் மற்றும் இலையின்  ஈரப்பத கால அளவை குறைக்கலாம் .
  • பாதிக்கப்பட்ட பகுதிகளை போரடியாக்ஸ் கலவை மூலம் அகற்றலாம்.
  • பாதிக்கப்பட்ட பகுதிகளை அழிக்கவும்.
  • தலைச்சது, மணிச்சத்து மற்றும் சாம்பல்ச்சது பயன்படுத்தி மண் சத்து நிலையை மேம்படுத்தவும்.

Content validator: Dr. M. Deivamani, Assistant Professor, Horticulture Research Station, Yercaud-636602.

Image source:

Keith, l., Ko, W.H and Sato D.M. 2006. Identification Guide for Diseases of Tea (Camellia sinensis). Plant Disease, 33, pp-1-4.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015