சாம்பல் கருகல் நோய்: கொலட்டோட்ரைக்கம் வகை, பெச்டாலொட்டியோப்சிச் வகை
சேதத்தின் அறிகுறி:
- சிறிய ,வட்ட வடிவில் வெளிர் பச்சை மஞ்சள் புள்ளிகள் இளம் இலைகளில் தோன்றும்.
- பெரும்பாலும் புள்ளிகளை சுற்றி குறுகிய, மஞ்சள் மண்டலம் காணப்படும்.
- புள்ளிகள் வளர்ந்து பழுப்பு அல்லது சாம்பல் நிறமாக மாறி, பரந்து கிடக்கும் வளையங்களை கொண்டு, சிறிய கருப்பு புள்ளிகளாக தோன்றி இலை திசுகள் உதிர்வதுடன் இலைகள் முழுமையாக் உதிர்ந்து விடும்.
- எந்த வயதிலும் இலைகள் பாதிக்கப்படும்.
|
|
|
|
பழுப்பு நிற கருகல் |
சாம்பல் நிற கருகல் |
வளையங்கள் |
பாதிக்கப்பட்ட இலைகள் |
வாழ்க்கை சுழற்சி
- சிறிய, கருப்பு புள்ளிகளின் புண்களில் உள்ளே பூஞ்சை வித்துகள் இருக்கும்.
- மழை தண்ணீர் மூலம் வித்துகள் ஒரு தாவரம் அல்லது பதிக்கப்பட்ட இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பரவுகிறது.
- வித்துக்கள் வேறு இலையை பாதிக்கும் பொது அவைகள் ஒரு புதிய இலைப்புள்ளி அல்லது ஒரு மறைந்திருக்கும் தொற்றை தொடங்கும்.
கட்டுப்படுத்தும் முறை:
- தாவரத்திற்கு அழுத்தம் இல்லாத சூழ்நிலையை அமைக்க வேண்டும்.
- தேயிலை புதரை காற்று உட்போகுமாறு போதிய இடைவெளியில் வளர்பதன் மூலம் இலையின் ஈரப்பத கால அளவை குறைக்கலாம் .
- குளிர் காலம் மற்றும் கோடை பருவத்தில் காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது போரடியாக்ஸ் கலவை 0.1% தெளிக்கவும்
Content validator: Dr. M. Deivamani, Assistant Professor, Horticulture Research Station, Yercaud-636602.
Image source:
Keith, l., Ko, W.H and Sato D.M. 2006. Identification Guide for Diseases of Tea (Camellia sinensis). Plant Disease, 33, pp-1-4. |