பயிர் பாதுகாப்பு :: தேயிலை/டீ பயிரைத் தாக்கும் நோய்கள் |
கொப்புளம் கருகல்: எக்சோபெசிடியம் வேகக்சன்ஸ்
சேதத்தின் அறிகுறி:
- முதலில் சிறு, குண்டூசி துளை அளவு புள்ளிகள் ஒரு மாதத்திற்கும் குறைவான இளம் இலைகளில் காணப்படும்.
- இலைகள் மேலும் வளரும் பொழுது, புள்ளிகள் வெளிப்படையாக, பெரிய, வெளிர் பழுப்பு ஆக மாறிவிடும்.
- சுமார் 7 நாட்களுக்கு பிறகு, இலையின் கீழே கொப்புளங்கள் கரும் பச்சை நிறத்தில், தண்ணீர் நனைத்த வலையங்களை போன்ற அறிகுறிகளை உருவாக்குகிறது.
- பூஞ்சை வித்துகள் வெளியாவதைத் தொடர்ந்து, கொப்புளம் வெள்ளை மற்றும் மிருதுவாக ஆகிறது.
- அதனைத் தொடர்ந்து கொப்புளம் பழுப்பாக மாறும் மற்றும் பாதிக்கப்பட்ட இளம் தண்டுகள் வளைந்து, முறிந்து சிதைந்துவிடும்.
வாழ்க்கை சுழற்சி
- நோய் சுழற்சி சாதகமான (ஈரமான) நிலையில் தொடர்கிறது மற்றும் காற்று மூலம் பூஞ்சை உடனடியாக பிரிகிறது.
- இலையில் இருக்கும் பூஞ்சை வித்திகள் போதுமான ஈர பதத்தில் முளைத்து , பாதிப்பை ஏற்படுத்தி , 10 நாட்களுக்குள் அறிகுறிகளை ஏற்படுத்தும்.
- பூஞ்சை நேரடியாக இலை திசுக்களில் ஊடுருவ முடியும்.
- பெசிடியோச்போறேஸ் வறட்சி அல்லது பிரகாசமான சூரிய ஒளி நிலைகளில் உயிர் வாழ்வது குறைவு.
- பூஞ்சை வாழ்க்கை சுழற்சி 3-4 வாரங்கள் ஆகும்.
|
|
கொப்புளம் கருகல் |
|
கட்டுப்பாட்டு
- பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் தளிர்களை கவாத்து மூலம் நீக்கி அழிக்கவும்.
- போரடியாக்ஸ் கலவையை அல்லது 0.1 % காப்பர் ஆக்சி குளோரைடு தெளிக்கவும்.
- ஒரு ஹெக்டருக்கு 210 கி காப்பர் ஆக்சி குளோரைடை, 210 கி நிக்கல் குளோரைடு உடன் கலந்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை ஜூன்- செப்டம்பர் காலம் வரை மற்றும் அக்டோபர்- நவம்பர் காலம் வரை தெளிக்கவும்.
- ஒரு ஹெக்டருக்கு டிரைடிமார்ப் 340 மற்றும் 560 மில்லி லேசான மற்றும் மிதமான மழை காலங்களில் தெளிக்கவும்.
Content validator: Dr. M. Deivamani, Assistant Professor, Horticulture Research Station, Yercaud-636602.
Image source:
Keith, l., Ko, W.H and Sato D.M. 2006. Identification Guide for Diseases of Tea (Camellia sinensis). Plant Disease, 33, pp-1-4. |
|