கிளைக்கருகல் நோய்/தண்டு சொறி: மேக்ரோபோமா தேயிகோலா
சேதத்தின் அறிகுறி:
- முதல் அறிகுறியாக பாதிக்கப்பட்ட இலைகள் பழுப்பாக மாறி பின்பு இலைகள் தொங்கிவிடும்.
- இலைகளில் நோய் பரவும் பொழுது கிளைகள் உலர்ந்த இறந்துவிடும்.
- நோய் தண்டிற்கு பரவி உலர்ந்து இறந்து போகும்.
- முழு கிளையும் முனையிலிருந்து கீழ் வரை இறந்து போகும்.
- இறந்த கிளைகள் பிளவு அடைந்து , தடித்த மேலோட்டமான பட்டை பகுதியில் சூழப்பட்ட புண்களை உருவாக்குகிறது .
|
|
|
|
பழுப்பாக மாறிய இலைகள் |
காய்ந்த இலைகள் |
தண்டு சொறி |
பாதிக்கப்பட்ட தோட்டம் |
வாழ்க்கை சுழற்சி:
- பூஞ்சை சிறிய, வட்ட வடிவிலான பிக்னிடியா வித்திகளை இறந்த கிளைகள் மீது உருவாக்குகிறது .
- பூஞ்சை வித்திகள் மழை மூலம் பரவுகிறது மற்றும் நிலத்தில் இருக்கும் சீரமைக்கப்பட்ட கிளைகளில் சில வாரங்கள் வாழ முடியும்.
- பூஞ்சை வழக்கமாக காயமடைந்த தாவர திசு மூலம் நுழைந்து தொற்றை ஆரம்பிகிறது .
கட்டுப்பாட்டு:
- நல்ல வடிகால் கொண்ட அமில மண்ணில் செடிகளை விதைக்கவும்.
- துருப்பிடித்த பகுதிகளிக்கு கீழே உள் கிளைகளை நிக்கி தகுந்த கிருமிநாசினி முலம் நோயை அழிக்க வேண்டும்.
- உரிய பாதுகாப்பு பூசண கொல்லிகளை ஈரமான வானிலை அல்லது இயற்கை இலை துளி காலங்களில் தெளித்து இந்நோயை கட்டுபடுத்தலாம்.
Content validator: Dr. M. Deivamani, Assistant Professor, Horticulture Research Station, Yercaud-636602.
Image source: Keith, l., Ko, W.H and Sato D.M. 2006. Identification Guide for Diseases of Tea (Camellia sinensis). Plant Disease, 33, pp-1-4. |