கருப்பு வேர் அழுகல்: ரோசெளினா அற்குவாட்டா
சேதத்தின் அறிகுறி:
- பூஞ்சையானது இறந்த குவிக்கப்பட்ட இலைகளில் மண்ணில் 5– 7.5 செ.மீ மட்டத்தில் உருவாகிறது. அங்கிருந்து தேயிலை செடி வேர்களுக்குப் பரவுகிறது.
- பட்டையை நீக்கும்பொழுது பூஞ்சாண இலைத் தொகுதியை காண முடியும்.
- மணல் பரப்பில் பூஞ்சை தண்டுகளைச் சுற்றி பரவி 7.5 -10.0 செ.மீ நிளத்திற்கு கொன்றுவிடும்.
- வீங்கிய மோதிரம் போன்ற திசு தண்டைச் சுற்றி உருவாகிறது.
கட்டுப்படுத்தும் முறை:
- பாதிக்கப்பட்ட செடியினை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும்.
- கீழே உதிரும் பாதிக்கப்பட்ட இலைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
- பாதிக்கப்பட்ட செடியை சுற்றிலும் பள்ளம் தோண்டி சூரிய ஒளி விழச்செய்வதன் மூலம் பூஞ்சானம் பரவுவதை கட்டுப்படுத்தலாம்.
Content validator: Dr. M. Deivamani, Assistant Professor, Horticulture Research Station, Yercaud-636602.
Source of image:
http://www.celkau.in/Crops/Plantation%20Crops/Tea/diseases.aspx |
|
கருப்பு வேர் அழுகல் |
|