பயிர் பாதுகாப்பு :: தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள் |
நாற்றழுகல்:
அறிகுறிகள்
- நாற்றழுகல் தக்காளியில் இரண்டு நிலைகளில் ஏற்படுகிறது. அதாவது முளைக்குமுன் மற்றும் முளைத்தபின் ஏற்படுகிறது.
- முளைக்கும் முன் நிலையில் மண் மேற்பரப்பை அடைவதற்கு முன்பே நாற்று இறந்துவிடுகிறது.
- முளைக் குருத்து முற்றிலுமாக அழுகிவிடும்.
- முளைத்த பின் நிலையில் இளம் திசுக்கள் நில மட்டத்திலேயே நோய்த் தொற்று ஏற்படுகிறது.
- பாதிக்கப்பட்ட திசுக்கள் மென்மையாகவும், நீர்த் தோய்ந்தும் காணப்படும். நாற்று தலை கீழே வீழ்ந்து அல்லது உடைந்து விழுந்துவிடும்.
|
|
|
ஆரோக்கியமான தாவரம் |
பாதிக்கப்பட்ட தாவரங்கள் |
பாதிக்கப்பட்ட நாற்று |
|
மேலாண்மை
- உயர்த்தப்பட்ட நாற்றங்கால் மேடைகளை உருவாக்க வேண்டும்.
- தொடர்ச்சியான நீர்ப்பாசனம் மற்றும் சரியான வடிகால் வசதி அமைக்க வேண்டும்.
- காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.2% அல்லது போர்டிக்ஸ் கலவை கொண்டு நனைக்க வேண்டும்.
- டிரைக்கோடெர்மா விரிடி (4கி / கிலோ விதை) அல்லது தைரம் (3கி / கிலோ விதை) விதை சிகிச்சை அளிப்பது ஒன்றே முளைக்குமுன் ஏற்படும் நாற்றழுகல் நோயைக் கட்டுப்படுத்தும்.
- மேகமூட்டமான வானிலை இருக்கும்பொழுது 0.2% மெட்டாலிக்ஸில் தெளிக்கவும்.
|
|