பயிர் பாதுகாப்பு :: தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

முன்பருவ இலைக்கருகல் :

அறிகுறிகள்

  • இது தக்காளியின் எந்த வளர்ச்சி நிலையிலும் பொதுவாக இலைகளின் மீது ஏற்படும் நோய் ஆகும்.
  • பூஞ்சை இலைகளை தாக்கும்பொழுது இலையில் புள்ளிகள் ஏற்பட்டு கருகத் தொடங்கும். முன்பருவ இலைக்கருகல் அதிகமாக வயது முதிர்ந்த இலைகளில் சிறியதாக கருப்பு காயங்களாக காணப்படும்.
  • புள்ளிகள் பெரிதாகி மற்றும் பொதுவான வளையங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும்.
  • திசுக்களை சுற்றியுள்ள புள்ளிகள் மஞ்சள் நிறமாகின்றன. அதில் வெப்பநிலை அல்லது ஈரப்பதம் ஏற்படும்பொழுது அதிக அளவில் இலைகள் இறந்துவிடுகின்றன.
  • இலையைப் போன்றே தண்டுகளிலும் காயங்கள் ஏற்படுகின்றன.
  • பின்பருவ அழுகல் நோயினால் தாவரம் பிடுங்கி நடும்பொழுது பூஞ்சையால் பாதிக்கப்பட்ட சில சமயங்களில் இறந்துவிடுகிறது. இந்த பூஞ்சை புள்ளிவட்டம் அல்லது தண்டு வழியாக பழங்களை பாதிக்கிறது.
  • காயங்கள் பொதுவாக பழம் முழுவதிலும் காணப்படுகின்றன. பொதுவான வளையங்கள் பழங்களில் காணப்படும்.
ஆரம்ப அறிகுறி பாதிக்கப்பட்டஇலை பொதுமைய வளையம்

மேலாண்மை

  • பயிர் குப்பைகளை அகற்றுதல் மற்றும் அழித்தல்
  • பயிர் சுழற்சி முறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் தாக்கத்தை குறைக்கலாம்.
  • திறம்பட நோயைக் கட்டுப்படுத்த மேன்கோசெப் 0.2% தெளிக்க வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016