பயிர் பாதுகாப்பு :: தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள் |
பாக்டீரியா வாடல் :
அறிகுறிகள்
- தக்காளிப் பயிரில் ஏற்படும் கடுமையான நோய்களில் ஒன்றாகும். ஒப்பீடுகையில் அதிக மண் ஈரம் மற்றும் மண் வெப்பநிலை இந்நோய்க்கு ஏதுவாக உள்ளது.
- பாக்டீரியா வாடல் அறிகுறியின் தன்மை வளரும் தாவரங்களை விரைவாக மற்றும் முழுமையாக வாடச் செய்வதாகும்.
- கீழ் இலைகள் வாடுவதற்க முன்பே விழுந்துவிடும்.
- நோய்க் கிருமி தண்டு நாளங்களில் படையெடுத்து திசுக்களை மஞ்சள் பழுப்பு நிறமாக நிறமாற்றமடையச் செய்கின்றன.
- பாதிக்கப்பட்ட தாவர பகுதியை வெட்டி சுத்தமான நீரில் மூழ்கச் செய்யும்பொழுது பாக்டீரியா வெள்ளைக் கீற்றை போல் வெளியே வரும்.
- இவை காயங்கள் மண் மற்றும் இதர சாதனங்களால் பரவுகின்றன.
- நாற்று நடும்பொழுது நாற்றிற்கு சேதம் ஏற்படாமல் நட வேண்டும்.
- வெளுக்கும் தூளை 10 கிலோ / ஹெக்டருக்கு கொடுக்க வேண்டும்.
|
|
ஆரோக்கியமான தாவரம் |
பாக்டீரியா தொற்று தாவரம் |
மேலாண்மை
பயிர் சுழற்சியாக தட்டைப்பயறு - மக்காச்சோளம் – முட்டைக்கோஸ், வெண்டை – தட்டைப்பயறு – மக்காச்சோளம், மக்காச்சோளம் – தட்டைப்பயறு மற்றும் கேழ்வரகு – கத்தரி போன்றவற்றை பயிரிடுவதன் மூலம் தக்காளியில் பாக்டீரியா வாடல் நோயைக் குறைக்கலாம்.
|
|