பயிர் பாதுகாப்பு :: தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள் |
இலை சுருட்டை நோய்
அறிகுறிகள்
- புதிதாக வளரும் தக்காளி செடியின் மஞ்சள் இலைகள் சுருண்டு தாவரத்தின் வளர்ச்சி குறைந்துவிடும்.
- புதிய இலைகள் அளவில் குறைந்து சுருங்கி, நரம்புகள் மஞ்சள் நிறமாகிவிடும். இலைகள் மேல் நோக்கி சுருண்டு பார்ப்பதற்கு கிண்ணம் போல் இருக்கும்.
- மலர்கள் தோன்றும் ஆனால் காய் பிடிப்பதற்குள் உதிர்ந்துவிடும்.
மேலாண்மை
- மஞ்சள் ஒட்டும் பொறியை வெள்ளை ஈக்களை கண்காணிக்க 12/ஹெக்டர் என்ற அளவில் வைக்க வேண்டும்.
- விளை நிலங்களைச் சுற்றி வேலிப் பயிராக தானிய வகைகள் பயிரிட வேண்டும்.
- களைகளை நீக்க வேண்டும்.
- நாற்றுகளை வலை கூடாரம் அல்லது பசுமை கூடாரத்தில் பாதுகாக்க வேண்டும்.
- இமிடா குளோரைடு 0.05% அல்லது டைமெதோட் 0.05% ஐ நடவு முடிந்து 15, 25, 45 ஆகிய நாட்களில் தெளித்தால் நோயினைக் கட்டுப்படுத்தலாம்.
|
|