தக்காளி புள்ளி வாடல் நோய்
அறிகுறிகள்
- இலைகள், தண்டு மற்றும் பழங்களில் கோடுகள் காணப்படும்.
- சிறிய, கருப்பு, வட்ட புள்ளிகள் இளம் இலைகளில் தோன்றும்.
- இலைகள் அடர் பழுப்பு நிறமாக மாறுகின்றன.
- பழங்களில் அரை அங்குல விட்டம் அளவிற்கு பல புள்ளிகள் காணப்படும். பழுத்த பழங்களின் கழுத்துப் பகுதியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாகின்றன.
- புள்ளி வாடல் வைரஸ் செடிப்பேன் மூலம் பரவுகின்றன.
|
|
பாதிக்கப்பட்ட இலை |
பாதிக்கப்பட்ட பழம் |
|
மேலாண்மை
- பாதிக்கப்பட்ட செடிகளை நீக்கி அழித்துவிட வேண்டும்
- பிற ஊள் வழங்கிளை நீக்குவதன் மூலம் வைரஸை குறைக்கலாம்.
- வேலிப் பயிர்களை அதிகரிக்கலாம். தக்காளி விதைப்பதற்கு முன் விளைநிலங்களைச் சுற்றி சோளம், மக்காச்சோளம், கம்புப்பயிர் போன்றவற்றை 5-6 வரிசைகள் நடவு செய்யலாம்.
- இமிடா குளோரைடு 0.05% அல்லது ஊடுறுவும் பூச்சிக் கொல்லிகளை தெளித்து வைரஸை கட்டுப்படுத்தலாம்.
|