பூச்சியின் விபரம்:
- முட்டை: இளந்தளிர் இலைகளின் அடிப்பகுதியில் காம்புடைய, பெரிப் பழம் வடிவில், வெளிர்மஞ்சள் நிற முட்டை காணப்படும்
- இளம்குஞ்சுகள்: முட்டை பொரித்தவுடன் வெளிவரும் இளம் குஞ்சுகள் நீள வட்ட வடிவில் மரவும் பூச்சி போன்று பச்சை கலந்த வெள்ளை நிறத்துடன் இருக்கும்
- முதிர்பூச்சிகள்: சிறு வெண்ணிற பூச்சிகள், இலைகளில் அடைஅடையாக மாவுப்பூச்சிகளை போன்று காணப்படும்
-
கட்டுப்படுத்தும் முறை:
- இலைச்சுருள் தாக்கப்பட்ட செடிகளை வேருடன் பிடுங்கி அழிக்க வேண்டும்
- தேவையான அளவு தழைச்சத்து மற்றும் நீர்பாசனம் மேற்கொள்ள வேண்டும்
- மாற்று உணவுப்பயிரான துத்தி செடியை நீக்க வேண்டும்
- மஞ்சள் நிற தகரடப்பாக்களின் மீது ஆமணக்கு எண்ணெய் தடவி பயிரின் உயரத்திற்கு குச்சிகளை நட்டு ஹெக்டேருக்கு 12 வைத்து கவரப்படும் பூச்சிகளை அழிக்கலாம். டப்பாக்களை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து புதிய எண்ணெய் தடவி வைக்கவேண்டும்.
- கார்போபியுரான் 3% G @40 கி.கி/எக்டர் என்ற அளவில் தெளிக்கவும்
- பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியைத் தெளிக்கவும்
|
|
|
இளம்குஞ்சுகள் மற்றும முதிர்பூச்சிகள் |
முட்டை மற்றும் முதிர்பூச்சிகள் |
பூச்சிகொல்லி |
அளவு |
டைமெத்தொயேட் 30 % EC |
1.0 மி/ லி |
மாலத்தியான் 50 % EC |
1.5 மி/ லி |
ஆக்சிடெமட்டான் / மீத்தையில் 25 % EC |
1.0 மி/ லி |
தையோமீத்தாக்சம் |
4.0 மி/ 10 லி |
|